- Advertisement -
உலக கிரிக்கெட்

IND vs PAK : பாகிஸ்தான் கேப்டனை வெளுத்து வாங்கிய – சோயிப் அக்தர்

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 140 ரன்களும், கோலி 77 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழைய குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் அதாவது 40 ஓவர்களில் 302 ரன்கள் அடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் : இந்த போட்டியில் டாஸ் வென்றது முக்கியமான விடயம் என்றாலும் பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணியின் மூளை இல்லாத கேப்டன்சியை காட்டுகிறது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தால் 260 முதல் 280 ரன்கள் எடுத்திருந்தால் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு போதுமானதாக அமைந்திருக்கும்.

மேலும் இரண்டாவதாக சேசிங் செய்யும் போது இந்தியாவிற்கு அது கூடுதல் நெருக்கடியை அளித்திருக்கும். சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி செய்த தவறினை தற்போது பாகிஸ்தான் இந்த உலக கோப்பையில் செய்துள்ளது. ஹசன் அலியும் சரியாக பந்து வீசவில்லை. அமீரும் தேவையான நேரத்தில் டிக்கெட் எடுக்க தடுமாறினார். இந்த போட்டியில் மூத்த வீரர் யாரும் பாகிஸ்தானில் சிறப்பாக செய்யப்படவில்லை என்று அனைத்து பாகிஸ்தான் அணி வீரர்களின் செயல்பாடு குறித்தும் சோயப் அக்தர் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by