ராகுல் செய்ததை அனுபவம் மிகுந்த நீங்களும் செய்யலாமா? கேப்டன் ரோஹித்துக்கு முன்னாள் வீரர் கேள்வி

Chopra
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக கடந்த பிப்ரவரி 6ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

SKY

- Advertisement -

இதை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்தியாவின் தரமான சுழல் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணி வெறும் 176 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் சஹால் 4 விக்கெட்டுகளையும் வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும் எடுத்தனர்.

பயன்படுத்தாத தீபக் ஹூடா:
அதை தொடர்ந்து 177 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 60 ரன்களும் சூரியகுமார் யாதவ் 36* ரன்களும் எடுத்து வெற்றிபெற செய்தார்கள். இந்த வெற்றியின் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என முன்னிலை பெற்று அசத்திய இந்தியா இத்தொடரின் 2வது போடியில் பிப்ரவரி 9ஆம் தேதி விளையாட உள்ளது.

hooda

முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் இளம் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அந்த போட்டியில் ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியபோது 6வது பந்துவீச்சாளராக தீபக் ஹூடா பந்து வீச அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு பந்துவீச ஒரு ஓவர் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. அதன்பின் சேசிங் செய்தபோது பேட்டிங்கில் வாய்ப்பு கிடைத்ததால் அதை பயன்படுத்திய தீபக் ஹூடா 32 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 26* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.

- Advertisement -

ராகுல் செய்த தவறு:
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் தீபக் ஹூடாவை பந்துவீச அழைக்காதது ஏன் என இந்தியாவின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது பின்வருமாறு. “அன்று வெங்கடேஷ் ஐயர், இன்று தீபக் ஹூடா. ஒருவருக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர்களை எப்படி ஆல்-ரவுண்டராக உருவாக்க முடியும். அவர்களை தேர்வுக் குழுவினர் ஒரு ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவர்களின் திறமை மீது சந்தேகம் அல்லது நம்பிக்கை இல்லாமல் இருப்பது போல தெரிகிறது” என இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

chopra

அவர் கூறுவது போல கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதேபோல இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆல்-ரவுண்டராக அறிமுகமானார். ஆனால் அந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் முதல் போட்டியில் இந்தியாவின் முதன்மையான 5 பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய போதிலும் 6வது பந்து வீச்சாளராக பயன்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு ஓவர்கூட பந்துவீச வாய்ப்பு கொடுக்கவில்லை. அதன் காரணமாக இறுதியில் இந்தியா படுதோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நீங்களும் இப்படி செய்யலாமா:
அதன் பின் 2வது போட்டியில் ஒரு சில ஓவர்கள் வாய்ப்பளித்த கேஎல் ராகுல் 3வது போட்டியில் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயருக்கு பந்து வீச வாய்ப்பளித்தார். மொத்தத்தில் அந்த தொடரில் அனுபவமே இல்லாமல் கேப்டன்ஷிப் செய்த கேஎல் ராகுல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதால் கடைசியில் இந்தியா படு மோசமான தோல்வியை சந்தித்தது. ஆனால் எம்எஸ் தோனி, விராட் கோலி போல பல மடங்கு கேப்டனாக அனுபவம் கொண்டுள்ள ரோகித் சர்மாவும் அவரைப் போலவே தவறு செய்யலாமா என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

Rohith

அதாவது முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையை எட்டினாலும் கூட தீபக் ஹூடாவுக்கு குறைந்தபட்சம் ஒரு சில ஓவர்கள் பந்து வீச வாய்ப்பளித்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை இளம் வீரர்கள் மீது ரோகித் சர்மா மற்றும் இந்திய அணி நிர்வாகத்தினரிடையே நம்பிக்கை இல்லாததால்தான் பந்துவீச வாய்ப்பளிக்கவில்லையா என்ற நியாயமான கேள்வியையும் ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார்.

Advertisement