நான் விளையாடியதிலேயே இந்த இரண்டு இன்னிங்ஸ்தான் எனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் – மனம்திறந்த ரஹானே

Rahane
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜின்கியா ரஹானே தான் ஆடிய ஆட்டங்களில் ஒரு சில ஆட்டத்தை மட்டும் தனக்கு மிகவும் பிடித்த ஆட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். அது குறித்தும் இந்த நேரத்தில் விவரித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருப்பவர் அஜின்கியா ரஹானே.

- Advertisement -

ஒரு காலத்தில் மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணியில் இடம் பிடித்தாலும், தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார். 31 வயதாகும் இவர் தற்போது வரை 90 ஒருநாள் போட்டிகள், 65 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். குறிப்பாக இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் தவிக்கும் போதெல்லாம் பலமுறை இந்திய அணியை காப்பாற்றியுள்ளார்.

தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் ரசிகர்களுடன் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடி வருகிறார். இந்த நேரத்தில்தான் தனக்கு பிடித்த ஆட்டம் பற்றி பேசியுள்ளார் ரஹானே. இதுகுறித்து அவர் கூறியதாவது :

Rahane 1

2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 103 ரன்கள் விளாசினேன். 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் அடித்தேன். இவை இரண்டும் சிறப்பு வாய்ந்தது என்று கூறியுள்ளார் ரஹானே.

- Advertisement -

லார்ட்ஸ் மைதானத்தில் 154 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார். இந்தியா ஒரு கட்டத்தில் கடுமையாக திணறிக் கொண்டிருந்தது. புவனேஸ்வர் குமார் உடன் 8-வது விக்கெட்டுக்கு இணைந்து ஆடிய ரஹானே 90 ரன்கள் சேர்த்தார் .இதன்மூலம் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இந்த போட்டியில் இந்திய அணி பல வருடங்களுக்கு பின்னர் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Rahane

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 307 ரன்கள் குவித்தது இந்திய அணி. ஷிகர் தவான் இந்த போட்டியில் 137 ரன்கள் அடித்திருந்தார். அபாரமாக ஆடிய ரஹானே 60 பந்தில் 79 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement