- Advertisement -
இந்திய கிரிக்கெட்

44 நாட்களில் இவர் வாழ்க்கையே தலைகீழா மாறிடிச்சி. பிக்கப் பண்ணிட்டாரு – அஜய் ஜடேஜா பாராட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே தற்போது நடைபெற்று வரும் 4 டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு முறை வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த 15 தேதி முதல் காபா மைதானத்தில் தொடங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே டெஸ்ட் தொடரை கைபற்றும்.

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் 369 ரன்கள் குவித்தது. இந்திய அணியும் தனது முதல் இன்னிஸ்சில் 336 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலை வகித்து தனது இரண்டாவது இன்னிஸ்சில் 294 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி 1.5 ஓவர்கள் எதிர்கொண்டு 4 ரன்கள் மட்டும் குவித்து விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜன் மூத்த வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பிடித்தார். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்குபெற்ற நடராஜன் மீண்டு 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். நடராஜன் 4வது டெஸ்டின் முதல் இன்னிஸ்சில் 24.2 ஓவர்கள் வீசி 78 ரன்கள் விட்டு கொடுத்துள்ளார். இதன்பின் இரண்டாவது இன்னிஸ்சில் 14 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டு கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

நடராஜனின் இந்த டெஸ்ட் பங்களிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் அஜெய் ஜடேஜா நடராஜனை பாராட்டி உள்ளார். நடராஜன் குறித்து பேசிய அஜய் : ” நடராஜன் தற்போது மகிழ்ச்சியாக இருப்பார். இவரது வாழக்கை கடந்த 44 நாட்களில் முழுவதும் மாறிவிட்டது. வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக டி20 அணியில் இடம்பெற்ற நடராஜன் தற்போது ஒருநாள் மற்றும் டி20 சிறப்பாக விளையாடினார்.

அதனால் அவருக்கு டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம் கிடைத்தது. தற்போது டெஸ்டிலும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்” அவரது வாழக்கை இந்த 44 நாட்களில் சரியான திசையில் நகர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -
Published by