- Advertisement -
உலக கிரிக்கெட்

இதுக்காக இந்தியாவுக்கு தலை வணங்குறேன்.. எங்களோட கேரக்டருக்காக பெருமைப்படுறேன்.. மார்க்ரம் பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது. பார்படாஸ் நகரில் ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 76, அக்சர் பட்டேல் 47, துபே 27, ரன்கள் எடுத்த உதவியுடன் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் துரத்திய தென்னாப்பிரிக்கா முழுமூச்சுடன் போராடியும் 20 ஓவரில் 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளாசின் 52 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்த தோல்வியை உடைத்து இந்திய சாதனை படைத்தது.

- Advertisement -

சோகமான பெருமையுடன் மார்க்ரம்:
ஆனால் முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற தென்னாபிரிக்கா கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் கோட்டை விட்டு தோற்றது. இந்நிலையில் தங்களுடைய பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் நன்றாகவே விளையாடியதாக தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ஆனால் அதையும் தாண்டி வென்ற இந்தியாவுக்கு தலைவணங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

அதே சமயம் கடினமாக போராடிய தங்களை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவிக்கும் அவர் வருங்காலத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது வெற்றியை நெருங்கிய ஒரு படியாகும். இது போன்ற பெரிய கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வது எளிதல்ல. அதில் கோப்பையை வென்ற இந்தியா போன்ற அணிக்கு நீங்கள் தலை வணங்க வேண்டும். ஏனெனில் அதில் கடினமான உழைப்பு இருக்கும்”

- Advertisement -

“நாங்களும் வெற்றியை ஒரு படி நெருங்கியுள்ளோம். கண்டிப்பாக வருங்காலங்களில் நாங்கள் முன்னோக்கிச் சென்று அந்த முதல் வெற்றியை பெறுவோம் என்று நம்புகிறேன். ஆனால் இம்முறை தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்துள்ளேன். ஒரு அணியாக நன்றாக விளையாடி வந்த நாங்கள் தோல்வியை சந்தித்ததால் அதிலிருந்து மீண்டு வர கொஞ்சம் நேரம் தேவைப்படும். இருப்பினும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் ஏற்கனவே சொன்னது போல் இது கொஞ்சம் வலிக்கிறது”

இதையும் படிங்க: உலககோப்பையை வாங்க விசித்திரமான ஸ்டைலில் நடந்து வந்த ரோஹித்.. அதற்கு ஐடியா குடுத்தது – யார் தெரியுமா?

“எங்கள் வீரர்கள் மற்றும் அணிக்காக பெருமைப்படுகிறேன். எங்களுடைய பவுலர்கள் நன்றாக பந்து வீசினர். அதே போல பிட்ச்சில் நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும் நினைக்கவில்லை. ஏனெனில் நாங்கள் இந்தியாவை ஓரளவு நன்றாக கட்டுப்படுத்தி சேசிங் செய்யக்கூடிய இலக்கை பெற்றோம். அதைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் நாங்கள் நன்றாகவே செயல்பட்டதாக நினைக்கிறேன். இருப்பினும் கடைசியில் அது தவறி சென்றது” கூறினார்.

- Advertisement -