- Advertisement -
உலக கிரிக்கெட்

யுவ்ராஜ், ஹர்பஜன் ஆகியோர் செய்த உதவிக்கு நன்றியுடன் இருப்பேன். அவர்கள் என்னை திட்ட இதுவே காரணம் – அப்ரிடி வெளிப்படை

யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்றோர் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் சாகித் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு உதவி வந்தனர். கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு இந்த உதவி சென்று சேரும் என்று அவர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்ற சாகித் அப்ரிடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றி சற்று தேவையில்லாத வார்த்தைகளாக கோர்த்து பேசினார்.

இதன் காரணமாக யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கடுப்பாகினர். இதனைத் தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங்… சாகித் அப்ரிடி அப்படி பேசியது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்தியா குறித்தும் நமது பிரதமர் குறித்தும் அவர் அப்படி பேசியிருக்க கூடாது. அதனை நாங்கள் சுத்தமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் .அவர் தனது அறக்கட்டளைக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

மனிதாபிமான அடிப்படையில் தான் உதவினோம். நமது பிரதமர் கூட எல்லைகள், மதங்கள் சாதியைக் கடந்து வைரஸை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார், இதன் காரணமாக அவருக்கு நாங்கள் உதவினோம் , ஆனால் தற்போது அந்த மனிதர் நமக்கு எதிராகவே பேசுகிறார்.

இனி அவருடன் எந்த ஒரு ஓட்டும் கிடையாது அவருக்கு நம்மைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது என்று கடுப்பாக தெரிவித்திருந்தார், அதனைத் தொடர்ந்து ஷிகர் தவானும், கௌதம் கம்பீரும், சுரேஷ் ரெய்னா ஆகியோரும் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சாகித் அஃப்ரிடி…

நான் எப்போதும் யுவராஜ் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் செய்த உதவிக்கு நன்றியுடன் இருப்பேன். மேலும், அவர்கள் இந்திய நாட்டில் இருக்கிறார்கள் நமக்கு எதிராக பேச அவர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் இதுகுறித்து மேலும் பேச எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் அவர். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by