முடிவுக்கு வந்த ஆப்கானிஸ்தான் அணியின் கனவு.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியா தென்னாப்பிரிக்கா – விவரம் இதோ

AFG-vs-RSA
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுப்பட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றான அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதனால் இந்த அரையிறுதி போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

அதன்படி டிரினிடாட் நகரில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வெறும் 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களை மட்டுமே குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக மார்க்கோ யான்சன் மற்றும் ஷம்ஸி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அஹமத்துல்லா ஓமர்சாய் மட்டுமே அதிகபட்சமாக 10 ரன்கள் குவித்தார். பின்னர் 57 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக ரீசா ஹென்றிக்ஸ் 29 ரன்களுடனும், மார்க்ரம் 23 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதற்கடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டியில் விளையாடும்.

இதையும் படிங்க : அரையிறுதி போட்டியில் வென்று இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இவைதான் – விவரம் இதோ

வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் லீக் சுற்றுப் போட்டிகளிலும் சரி, சூப்பர் 8 சுற்று போட்டிகளிலும் சரி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது அனைவரது மத்தியிலும் பாராட்டியினை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டியில் அவர்கள் தோல்வியை சந்தித்து வெளியேறியது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement