ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை தெருவில் இறங்கி கொண்டாடும் அந்நாட்டு மக்கள் – ஏன் தெரியுமா?

AFG
- Advertisement -

நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

குரூப் சுற்றில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த அந்த அணியுடன் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றிருந்தும் அவர்களுக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

சூப்பர் 8 சுற்றிலும் குரூப் ஒன்றில் இடம்பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்தியா ஆஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகள் இருந்தால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், முக்கியமான கடைசி ஆட்டத்தில் வங்கதேச அணியும் வீழ்த்தி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் அரையிறுதி சுற்று வரை முன்னேறியுள்ளது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி பெற்ற இந்த வரலாற்று வெற்றியை தற்போது அந்நாட்டு ரசிகர்கள், மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடி வருகின்றனர். ஏனெனில் எப்போது எங்கு என்ன நடக்கும்? என்று நிச்சயம் மாற்ற வாழ்க்கைக்கு மத்தியில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் அந்நாட்டு மக்களுக்கு கிரிக்கெட் மட்டுமே மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

இதையும் படிங்க : ஆசியாவிலேயே தற்போது இந்திய அணிக்கு அடுத்து ஆப்கானிஸ்தான் தானாம் – பாக் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி கிரிக்கெட் பயிற்சி எடுத்து தற்போது உலக கிரிக்கெட்டில் அரையிறுதி வரை அந்த அணி முன்னேறியதை நினைத்து அந்நாட்டு மக்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக விளையாட இருக்கின்றனர்.

Advertisement