- Advertisement -
ஐ.பி.எல்

கனவு நிஜமாகிருக்கு.. அப்பாவிடம் கத்துக்கிட்டேன்.. இதான் எங்களோட மெசேஜ்.. அபிஷேக் சர்மா பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தானை 36 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அதனால் மே 26ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ள ஹைதராபாத் தகுதி பெற்றது. சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் மே 24ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 50, ராகுல் திரிபாதி 37 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான், ட்ரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே ஹைதராபாத்தின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் 20 ஓவரில் 139/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அசத்திய அபிஷேக்:
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 42, துருவ் ஜுரேல் 56* ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக சபாஷ் அகமது 3, அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல முடியாமல் ராஜஸ்தான் பரிதாபமாக வெளியேறியது. ஹைதெராபாத்தின் இந்த வெற்றிக்கு பகுதி நேர பவுலராக 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த அபிஷேக் ஷர்மா முக்கிய பங்காற்றினர்.

இப்போட்டியில் பேட்டிங்கில் 12 ரன்னில் அவுட்டானாலும் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டதை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் முழுமையாக நான் 4 ஓவர்களை வீசுவது இந்தப் போட்டியாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு நான் தயாராக இருந்தேன். என்னுடைய பந்து வீச்சில் நான் வேலை செய்தேன். கடந்த 2 வருடங்களாக நான் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டேன்”

- Advertisement -

“எனவே பந்து வீச்சில் நான் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதை நான் என்னுடைய தந்தையுடன் இணைந்து செய்தேன். நாங்கள் பேட்டிங் செய்த போது பிட்ச் வேகமாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அது சுழல துவங்கியது. பட் கமின்ஸ் ஸ்பின்னர்களை சிறப்பாக பயன்படுத்தினார். அவர் எனக்கு இன்று பவுலிங் கொடுத்ததும் பயிற்சியில் செய்த அத்தனையும் களத்தில் செயல்படுத்த நினைத்தது அழுத்தத்தை கொடுத்தது”

இதையும் படிங்க: பேட்டிங்லயே கண்டுபிச்சுட்டேன்.. ஆர்சிபி மாதிரி இப்போ கொண்டாட மாட்டோம்.. ஆட்டநாயகன் சபாஷ் அஹ்மத் பேட்டி

“சயீத் முஷ்டாக் அலி கோப்பையை நாங்கள் பஞ்சாப் அணிக்காக வென்றோம். அங்கிருந்தே பந்து வீச்சில் அசத்த வேண்டுமென்ற வேகம் எனக்குள் வந்தது. அதற்காக நான் கடினமாக வேலை செய்தேன். எங்களுடைய மெசேஜ் மிகவும் எளிது. எங்களுடைய அணி நிர்வாகம் சுதந்திரமாக விளையாடுவதற்கான அனுமதியை கொடுத்தனர். ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்றாகும். அது நிறைவேறி வருகிறது” என்று கூறினார்.

- Advertisement -