- Advertisement -
ஐ.பி.எல்

சிஎஸ்கே தப்பு பண்ணிடாங்க.. அடுத்த வருஷம் விளையாட வந்தா தோனியை இப்படி வரச்சொல்லுங்க.. ஏபிடி கருத்து

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் தோனி ஒப்படைத்தார். அவருடைய தலைமையில் ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு தடுமாறிய சென்னை 14 போட்டிகளில் 7 தோல்வி 7 வெற்றிகளை பதிவு செய்தது.

குறிப்பாக பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற சென்னை நூலிலையில் பிளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டது. அந்த வகையில் புதிய கேப்டன் தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே 2020, 2022 வருடங்களைத் தொடர்ந்து 3வது முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் தோனியை வெற்றிகரமாக வழியனுப்ப முடியாமல் போனது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

ஏபிடி கருத்து:
இந்நிலையில் ருதுராஜ் கேப்டனாக நன்றாக செயல்பட்டாலும் தோனி இருக்கும் வரை அவர் தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த வருடம் தோனி விளையாட வந்தால் கேப்டனாக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“நான் உண்மையான பதிலை மட்டுமே கொடுப்பேன். நீங்கள் என்ன சொன்னாலும் அதை நான் ஒரு தவறு என்றே சொல்வேன். அதாவது எம்எஸ் தோனி சிஎஸ்கே அணிக்காக நீண்ட வருடங்கள் விளையாடி வருகிறார். அவர் கேப்டனாக இருப்பது எதிரணிகளை அச்சுறுத்தும் காட்சியாக இருக்கும். ஆனால் இம்முறை அவர் கேப்டனாக இல்லாததால் சிஎஸ்கே அணியிடமிருந்து மிரட்டல் காரணிகளை எதிரணிகள் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டனர்”

- Advertisement -

“கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அவர் கேப்டனாக நன்றாகவே செயல்பட்டார். இருப்பினும் எம்எஸ் தோனி உங்களை சுற்றியிருக்கும் போது அவரை நீங்கள் கேப்டனாக கொண்டிருக்காதது வீண் என்று நினைக்கிறேன். இதை அவர்கள் ஏற்கனவே முயற்சித்துப் பார்த்தனர். ஆனால் ஜடேஜா சிறப்பாக செயல்படாததால் பாதியிலேயே மாற்றப்பட்டார்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பிறகு விடியற்காலை 5 மணி வரை பார்ட்டி நடத்திய ஆர்.சி.பி வீரர்கள் – உளறிக்கொட்டிய வீரர்

“துரதிஷ்டவசமாக இந்த வருடமும் ருதுராஜ் தலைமையில் சென்னை பெரும்பாலான போட்டிகளில் நன்றாக விளையாடினர். ஆனால் கடைசியில் அவர்களால் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. அது ருதுராஜ் கேப்டன்ஷிப் காரணத்தால் கிடையாது. ஆனால் எம்எஸ் தோனி சிஎஸ்கே அணியை சுற்றியிருக்கும் போது அவர் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -