2வது ஓவர்லயே முடிச்சுட்டாரு.. இளம் வீரர்கள் ரோஹித் வார்த்தையை ஃபாலோ பண்ணனும்.. ஆரோன் பின்ச் பராட்டு

Aaron Finch
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் வாய்ப்பை நெருங்கியுள்ளது. குறிப்பாக சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இந்தியா நேற்று வங்கதேசத்தையும் 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஹர்திக் பாண்டியா 50*, விராட் கோலி 37 ரன்கள் எடுத்த உதவியுடன் 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய வங்கதேசத்தை 146/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக அப்போட்டியில் ஹர்திக் பாண்டியா மட்டுமே 50 ரன்கள் அடித்தார். அவருடன் ரோஹித் 22, கோலி 37, ரிஷப் பண்ட் 36, சிவம் துபே 34 என இதர வீரர்கள் கணிசமான ரன்களை அதிரடியாக எடுத்ததால் இந்தியா எளிதாக 196 ரன்கள் அடித்தது.

- Advertisement -

ரோஹித்துக்கு பாராட்டு:
எனவே சதம், அரை சதம் போன்ற சொந்த சாதனைகளை விட அதிரடியாக விளையாடுவதே டி20 கிரிக்கெட்டில் வெற்றியை கொடுக்கும் என்று கேப்டன் ரோகித் சர்மா போட்டியின் முடிவில் தெரிவித்தார். அதை பின்பற்றியே இந்தியா விளையாடுவதாகவும் ரோகித் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் அணுகுமுறையை இளம் வீரர்கள் பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவதை பற்றி ரோஹித் சர்மா சொன்னதை நான் விரும்புகிறேன். இங்கே வெற்றி என்பது 50 அல்லது 100 ரன்களில் வருவதில்லை. அதை பின்பற்றிய இந்தியா 2வது ஓவரிலேயே வங்கதேசத்தை பின்னங்காலில் தள்ளியது”

- Advertisement -

“முன்பெல்லாம் இளம் வீரர்களிடம் சதம், அரை சதம், இரட்டை சதம் அடியுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் நவீன கிரிக்கெட்டில் இளம் வீரர்கள் 18, 19, 20 ரன்களை அடிப்பதற்காக வருகின்றனர். இப்போதெல்லாம் அவர்கள் 4 ஓவர்கள் மட்டும் விளையாடி நான் என்னுடைய அணிக்காக போட்டியை வெல்வேன் என்று சொல்கின்றனர். அதையே ரோஹித் சர்மா சொல்கிறார்”

இதையும் படிங்க: இதுக்கு தான் அவங்களுக்கு வழிவிடுங்கன்னு சொன்னேன்.. எல்லா பந்துலயும் சிக்ஸ் அடிப்பீங்களா? ஷாகிப்பை விளாசிய சேவாக்

“கடந்த உலகக் கோப்பையில் அவர் அப்படியே அணியை வழி நடத்தினார். அப்படி விளையாடப் போகும் விதத்தில் அவர் சமரசம் செய்து கொள்வதில்லை. அதற்காக அவர் பெரிய ஸ்கோர் பெறவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எப்படி விளையாடுகிறேன் என்பதை விட அணி எப்படி விளையாட வேண்டும் என்பதே முக்கியமென்று அவர் சொன்னார். அந்த வகையில் மீண்டும் அவர் இந்திய அணியை பயமற்ற வழியில் வழி நடத்துகிறார்” என்று கூறினார்.

Advertisement