குல்தீப்பின் சைனாமேன் வித்தையை சமாளிக்க புதுவித பயிற்சி..! இந்திய சரியான ஸ்பிரிட்டில் ஆடவில்லை..! இங்கிலாந்து குற்றச்சாட்டு..!

morgan
Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு உலகின் பவர்ஃபுல் அணியாக தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய உச்சகட்ட நாள் இன்று! ஆஸ்திரேலியாவைச் சொந்த மண்ணில் ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து, இந்தியாவையும் வீழ்த்தும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும். இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இதையேதான் நினைத்தது. ஆனால், நடந்ததோ வேறு.
rahul
குல்தீப் யாதவின் சுழலைச் சந்திக்கமுடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணற, கே.எல் ராகுலுக்கு எப்படி பெளலிங் போடுவது என்பதே புரியாமல் இங்கிலாந்து பெளலர்கள் திண்டாடினர். குல்தீப்பின் இடது கை சைனாமேன் பெளலிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது. கே.எல் ராகுல் 54 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். இந்தியா செம ஈஸியாக இங்கிலாந்தை வீழ்த்தியது.

முதல் தோல்வியை இங்கிலாந்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. டேவிட் வில்லி, “இந்தியர்கள் சரியான ஸ்பிரிட்டில் முதல் மேட்ச்சை விளையாடவில்லை” என விமர்சிக்கிறார். `இந்திய ஸ்பின்னர்களை அடுத்தடுத்த போட்டிகளில் சமாளித்துவிடுவோம்’ என்கிறார் இயான் மோர்கன். ஆனால், உண்மையில் இந்திய அணி இருக்கும் தற்போதைய ஃபார்மில் இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்த மிகப்பெரிய சாதனைகளைச் செய்தாக வேண்டும். 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். இங்கிலாந்து ஸ்பின்னர்கள் மொயின் அலியும், ரஷித்தும் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்க வேண்டும். இது நடக்குமா?
willey
இன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது டி-20 இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கே மிகமிக முக்கியமான போட்டி. இன்று தோல்வியடைந்தால் இந்தியா டி-20 தொடரை வென்றுவிடும் என்பதால் இங்கிலாந்து தனது அத்தனை அஸ்திரங்களையும் ஏவத் தயாராகிக்கொண்டிருக்கிறது!

மெர்லின் மெஷின்!
குல்தீப் யாதவின் சைனாமேன் சுழற்பந்தைச் சமாளிக்க, இங்கிலாந்து புதுவித பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. மெர்லின் ஸ்பின் பெளலிங் மெஷின் என அழைக்கப்படும் இந்தச் சாதனத்தில் பந்து எப்படி வேண்டுமானாலும் சுழன்றுவரும். இந்த மெஷின் போடும் பெளலிங்கைத்தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடி பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -
Advertisement
SOURCEvikatan