ஆடுகளத்தில் பாம்பு நடனம் ஆடிய வங்கதேசம் வீரர்.

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.இலங்கை-வங்கதேச அணிகளிடையே நடைபெற்ற மூன்றாவது லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20ஓவர்களின் முடிவில் 214 ரன்களை குவித்தது.

rahim1

பின்னர் 20ஓவர்களில் 215 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் 19.4 ஓவர்களிலேயே 5விக்கெட்டுகள் இழப்பில் 215 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தமிமீ இக்பால் 47 ரன்களையும், லிட்டன் தாஸ் 43ரன்களையும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய சௌமியா சர்க்கார் 24 ரன்கள் எடுத்து வெளியேற மொமதுல்லா 20 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்த சபீர் ரஹ்மான் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

bangladeshs

முஷ்பிகூர் ரஹீம் அபாரமாக விளையாடி 72 ரன்கள் எடுத்து வங்கதேச அணியின் வெற்றியை உறுதிசெய்து இலங்கையை துவம்சம் செய்தார்.வங்கதேச வெற்றியை முஷ்பிகூர் ரஹீம் மைதானத்தில் உணர்ச்சி வசம் பொங்க கொண்டாடினார்.

- Advertisement -

https://www.youtube.com/watch?v=1tSPcRLKeg4&feature=youtu.be