IPL 2023 : அப்டி என்ன பண்ணிட்டாரு? அவருக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்காதீங்க – இங்கிலாந்து வீரரை விளாசிய கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. அதனால் ஹைதராபாத்துக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் அந்த அணி உள்ளது. முன்னதாக 2019 உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த வருடம் காயத்தால் விளையாட மாட்டார் என்பது தெரிந்தும் விட்டால் பிடிக்க முடியாது என்று கருதிய மும்பை நிர்வாகம் 8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

Jasprith Bumrah Jofra Archer

- Advertisement -

அதை தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டது போலவே 2022 சீசனில் காயத்தால் ஒரு போட்டியில் கூட விளையாடாத அவர் இலவசமாக 8 கோடி சம்பளத்தை வாங்கியதுடன் வரலாற்றில் முதல் முறையாக மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை படிப்பதற்கு மறைமுக காரணமாகவும் அமைந்தார். அதை விட இந்த வருடம் பும்ரா காயத்தால் வெளியேறியதால் மும்பை வெற்றி பாதையில் நடக்க அவர் முழுமையாக விளையாடி சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயமாக மாறியது. ஆனால் அந்த சூழ்நிலையில் களமிறங்கி ஆரம்ப கட்ட போட்டியிலேயே ரன்களை வாரி வழங்கிய அவர் காயமடைந்து வெளியேறினார்.

கவாஸ்கர் விளாசல்:
அதைத் தொடர்ந்து மும்பை நிர்வாகம் சார்பில் வெளிநாட்டுக்குச் சென்று இலவச சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்பிய அவர் மீண்டும் களமிறங்கிய ஓரிரு போட்டிகளுடன் காயமடைந்து மொத்தமாக வெளியேறியுள்ளார். மொத்தத்தில் இந்த சீசனில் வெறும் 5 போட்டிகளில் 20 ஓவர்களை மட்டுமே வீசிய அவர் 2 விக்கெட்களை எடுப்பதற்குள் 190 ரன்களை வாரி வழங்கி பெரிய பின்னடைவை கொடுத்து விட்டு இங்கிலாந்து விரும்பியுள்ளார். அதனால் ஏமாற்றமடைந்துள்ள மும்பை ரசிகர்கள் 2 வருடங்களில் வீசிய 20 ஓவருக்கு 16 கோடி சம்பளம் என்பது பகல் கொள்ளை என்ற சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Virat Kohli vs Jofra Archer

இந்நிலையில் முழுமையாக குணமடையவில்லை என்பதை தெரிவிக்காமலேயே விளையாடி பின்னடைவை கொடுத்த ஜோப்ரா ஆர்ச்சருக்கு மும்பை நிர்வாகம் ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கக் கூடாது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி மிட்-டே பத்திரிகையில் அவர் எழுதியுள்ளது பின்வருமாறு. “ஜோப்ரா ஆர்ச்சரிடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவம் என்ன? அவர் கடந்த வருடம் விளையாட மாட்டார் இந்த சீசனில் தான் களமிறங்குவார் என்று தெரிந்தும் அவர்கள் பெரிய தொகையை கொடுத்து வாங்கினார்கள்”

- Advertisement -

“ஆனால் பதிலுக்கு அவர் என்ன செய்தார்? குறிப்பாக 100% ஃபிட்டாக இல்லாதது போல் காட்சியளிக்கும் அவர் அதைப்பற்றி தனது அணியிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். அப்போது தான் அவர் வழக்கமான வேகத்தில் எத்தனை போட்டிகளில் விளையாட முடியும் என்பதை மும்பை நிர்வாகம் அறிவார்கள். மேலும் ஐபிஎல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அவர் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக தனது நாட்டு வாரியத்தின் தலையீட்டால் சென்றார். எனவே அவர் எப்போதுமே முழுமையாக ஃபிட்டாக இல்லை. ஆனாலும் அவர் இங்கே விளையாட வந்தார்”

gavaskar

“அது போன்ற நிலைமையில் இங்கிலாந்து வாரியம் கொடுக்கும் பணத்தை விட அதிக சம்பளத்தை கொடுக்கும் தனது அணிக்காக அவர் கடைசி வரை இருந்து விளையாடியிருக்க வேண்டும். குறிப்பாக செயல்பாடுகள் சரியாக இல்லாமல் இருந்தாலும் மும்பை அணியில் அவர் கடைசி வரை இருந்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவர் பாதியிலேயே லண்டனுக்கு திரும்பியுள்ளார். அது போன்றவர்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வழங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை”

இதையும் படிங்க:

“மேலும் நாட்டுக்காக அல்லது பணத்துக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் சொந்த முடிவாகும். அந்த வகையில் நாட்டுக்காக அவர் விளையாட தேர்ந்தெடுத்தால் அதற்கு முழு மதிப்பெண் கொடுக்கலாம். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாட தீர்மானித்தால் ஏதேனும் காரணத்தைக் கூறிக்கொண்டு பாதியிலேயே வெளியேறக்கூடாது. குறிப்பாக பிளே ஆஃப் சுற்று நெருங்கும் சமயத்தில் நீங்கள் பாதியிலேயே செல்லக்கூடாது” என்று கூறினார்.

Advertisement