ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து பல பரபரப்பான திருப்பங்களுடன் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை இந்த 4 வாரங்களும் பெரிய அளவில் வெற்றிகரமாக அமையவில்லை. ஏனெனில் கேப்டன் எம்எஸ் தோனி பதவி விலகிய நிலையில் அனுபவமில்லாத புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் இந்த வருட தொடரை துவங்கிய அந்த அணி முதல் 4 போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

இருப்பினும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை போராடிப் பெற்ற அந்த அணி அதன்பின் குஜராத்துக்கு எதிராக தோற்று பரம எதிரியான மும்பைக்கு எதிராக வென்று மீண்டும் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மண்ணை கவ்வியது. தற்போதைய நிலைமையில் 8 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அடுத்த 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஒருவேளை அப்படி 6 தொடர் வெற்றிகளை பெற்றாலும் கூட நாக் அவுட் சுற்றுக்கு உறுதியாக செல்லும் என்பது 90% சந்தேகம்தான்.
ராஜவர்தனுக்கு இடமில்லை:
இந்த தொடர் தோல்விகளுக்கு சுமாரான பேட்டிங்கை விட சென்னையின் மோசமான பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. 14 கோடிக்கு நம்பி
