ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனான யுஸ்வேந்திர சாஹல் – சஞ்சு சாம்சன் வாழ்த்து (திடீர் மாற்றம்)

Rajasthan Royals Jersey 2022
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. இதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இணையும் வீரர்கள்:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இதில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் அந்தந்த அணிகளில் இணைந்து வருகிறார்கள். குறிப்பாக சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய இந்திய வீரர்கள் அந்தந்த அணிகளில் இணைந்தனர்.

- Advertisement -

இதை அடுத்து லீக் சுற்று துவங்கும் மும்பை நகரில் ஒன்று கூடிய அனைத்து அணிகளும் நாளை முதல் மிகத் தீவிரமான வலைப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். அதிலும் குறிப்பாக நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைப்பதற்காக கடந்த ஒரு வாரமாக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ராஜஸ்தானில் சஹால்:
கடந்த பல வருங்களாக ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முக்கிய முதுகெலும்பு வீரராக விளையாடி வந்த இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யூஸ்வென்ற சஹால் இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். ஏலத்தின் வாயிலாக 6.5 கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் ராஜஸ்தான் அணியில் விளையாடுவதற்காக அந்த அணியுடன் இன்று இணைந்தார். அவரை வரவேற்ற அந்த அணி நிர்வாகம் அந்த வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்தது.

- Advertisement -

பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டில் மிகவும் கலகலப்பான ஜாலியான வீரராக வலம் வரும் அவர் “தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்ய போகிறேன்” என அந்த வீடியோவிற்கு பதிலளித்திருந்தார். அதை தொடர்ந்து இன்று மாலை நேரத்தில் சொன்னபடியே ராஜஸ்தான் அணியின் டுவிட்டர் கணக்கை அவர் ஹேக் செய்தார்.

ரகளை செய்த சஹால்:
இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான ஜேக் லஷ் மெக்ரம்மை தொடர்பு கொண்ட அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டுவிட்டர் கணக்கின் பாஸ்வேர்ட்டை பெற்று வெற்றிகரமாக லாகின் செய்தார். இதுபற்றி தனது சொந்த ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

- Advertisement -

அதன்பின் ராஜஸ்தான் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவேற்றிய அவர் “ராஜஸ்தான் அணியின் கேப்டனை பாருங்கள்” என ட்வீட் செய்தார். அதற்கு ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படும் சஞ்சு சாம்சன் “வாழ்த்துக்கள் யூசி” என ரிப்ளை கொடுத்தார்.

அதற்கு “பொறாமை பொறாமை” என சிரித்துக்கொண்டே சஹால் பதிலளித்தார். முதலில் இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ராஜஸ்தான் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப் பட்டதாக நினைத்தனர். ஆனால் சஹால் தான் இந்த வேலையில் ஈடுபட்டார்கள் என்பது பின்புதான் அனைவருக்கும் தெரியவந்தது.

இது மட்டுமல்லாமல் தாம் பேட்டிங் செய்யும் ஒரு புகைப்படத்தை வைத்து “இதற்கு 10000 ரீட்வீட் செய்தால் ஜோஸ் பட்லர் உடன் ஓப்பனிங்கில் களமிறங்குவார்” என தன்னைத்தானே காலாய்த்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார்.

மேலும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு பிரைவேட் மெசேஜ் அனுப்பிய அவர் அதில் “ஹாய் ஜோஸ் பேபி, ஐ லவ் யூ சோ மச்” என அனுப்பியிருந்தார். அத்துடன் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினையும் விட்டுவைக்காத அவர் உங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பது போல் ட்வீட் செய்தார். மொத்தத்தில் சமூக வலைத்தளத்தில் சஹால் செய்த ரகளைகள் இந்திய ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Advertisement