உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : முதல் ஆளாக முன்வந்து நிதியுதவி செய்த இந்திய வீரர் – விவரம் இதோ

INDvsAUS
- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் உத்தரகண்ட்டில் சமீபத்தில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பதாக வந்த செய்தியை அடுத்து சம்தோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஸப் பண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதல் டிவிட்டில்

pant 2

- Advertisement -

“உத்தரகண்ட் ஃபிளாஷ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் பிரார்த்தனையும் தெரிவித்து கொள்கிறேன். சிக்கலில் உள்ளவர்களுக்கு ஏற்பவாறு மீட்புப் பணிகள் மூலம் உதவ முடியும் என்று நம்புகிறேன்” எனவும் , பின்பு அதனை தொடர்ந்து பதிவிட்ட மற்றொரு டிவிட்டில் :

“உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. மீட்பு முயற்சிகளுக்காக எனது போட்டிக் கட்டணத்தை நன்கொடையாக வழங்க விரும்புகிறேன், மேலும் பலரை உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

pant

ரிஸப் பண்டின் இத்தைகைய பதிவு தற்பொழுது அனைவருது பாரட்டையும் பெற்று வருகின்றது. மேலும் தான் உதவியது போலவே அனைவரும் முன்வந்து உதவுமாறு ரசிகர்களிடம் ரிஷப் பண்ட் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement