நான் அதிக விக்கெட்டை வீழ்த்தாதற்கு தோனியும், கோலியுமே காரணம் – இஷாந்த் சர்மா பகீர் பேட்டி

Ishanth
- Advertisement -

9இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் இஷாந்த் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 2007 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு அறிமுகமானார். அதன் பின்னர் சில ஆண்டுகள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்த அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் அணியில் 13 ஆண்டு காலமாக இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

Ishanth

- Advertisement -

இப்படி 13 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வரும் இவர் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் சர்வதேச அரங்கில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இந்திய அளவில் கபில் தேவுக்கு அடுத்து படைக்க உள்ளார். ஆனால் இவ்வளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 400 விக்கெட்டுகளை மேலாவது எடுத்திருக்க வேண்டும். ஆனால் இஷாந்த் சர்மா இதுவரை 297 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

இவ்வளவு அனுபவம் மிக்க ஒரு வீரர் இவ்வளவு குறைந்த விக்கெட்டுகளை எடுத்து அதற்கு காரணம் என்ன என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பேசிய இஷாந்த் சர்மா : இதற்கு காரணம் என்று சில கேப்டன்களை அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போதும் எப்போதும் என்னிடம் கேப்டன்கள் வந்து 20 ஓவர்களில் குறிப்பிட்ட அளவு ரன்களையே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

அதனால் நான் அவற்றையே செய்வேன். கேப்டன்களில் பேச்சைக் கேட்டு ஒவ்வொரு வீரருக்கும் எதிராக பந்து வீசி அவர்களை கட்டுக்குள் கொண்டு பேட்ஸ்மேன்களை திணறடிப்பேன். தோனி கோலி போன்ற கேப்டன்கள் கூட என்னிடம் வந்து விக்கெட்டுகளை எடுப்பதை விட எதிரணி வீரர்களை திணறடிக்க வேண்டும் என்று பலமுறை கேட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

அதனால் அவர்கள் கூறியது போலவே பேட்ஸ்மேன்களை கஷ்டப்படுத்தும் வேலையை மட்டுமே நான் செய்வேன். அந்த நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை விக்கெட்டுகளை எடுப்பார்கள். அதனால் எனது விக்கெட் எண்ணிக்கை குறைவானது. ஆனால் அதைப்பற்றி நான் ஒருபோதும் எண்ணியதில்லை .கேப்டன் என்ன சொல்கிறாரோ அதை நான் செய்வேன்.

Ishanth-1

இவ்வளவு அனுபவம் இருந்தும் என்னால் உலகக்கோப்பை அணியில் விளையாட முடியாததை நினைக்கும் போது சற்று வருத்தம் அளிக்கிறது. எல்லாரும் போலவே எனக்கும் உலக கோப்பை தொடர்களில் விளையாட ஆசை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement