ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை அண்மையில் பி.சி.சி.ஐ அறிவித்தது. அந்த அணியில் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காதது பலரது மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.
சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து பேசிய : கவுதம் கம்பீர்
ஏற்கனவே அயர்லாந்து தொடரின் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்து தொடருக்கான முதல் போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இரண்டாவது போட்டியில் வாய்பளிக்காமல் அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி விளையாடி வருகிறார். எஞ்சியுள்ள போட்டிகளிலும் அவரே துவக்க வீரராக விளையாடுவார் என்றும் தெரிகிறது.
ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் தனது இடத்தை இழந்த சாம்சன் தற்போது ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை என்பதனால் மீண்டும் அவர் டி20 போட்டிகளுக்கான துவக்க வீரராக விளையாட முடியாது என்று தெரிகிறது. இவ்வேளையில் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது குறித்து தெளிவான தகவலை தற்போது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது சஞ்சு சாம்சனுக்கு 31 வயதாகிறது. இந்த வருடம் நவம்பர் மாதத்தில் அவருக்கு 32 வயதாகும் 2028 உலகக் கோப்பை தொடரின் போது 34 வயதை நெருங்கி விடுவார். எனவே அடுத்த 5 முதல் 7 ஆண்டுகள் வரை நிரந்தரமாக விளையாடும் ஓப்பனர்கள் தேவை என்பதனாலே வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களை வளர்க்க நினைக்கிறோம்.
இதையும் படிங்க : பவர்பிளே ஓவர்களில் இதற்கு முன்னர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்ல – இந்திய பேட்ஸ்மேன்கள் அளித்த ஏமாற்றம்
அதன் காரணமாகவே சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். இப்படி டி20 போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் ஓரங்கட்டப்பட்டாலும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பினை வழங்க கம்பீர் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



