இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று நாட்டிங்காம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.
இந்திய அணி அடைந்த மோசமான சாதனை :
இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக பில் சால்ட் 70 ரன்களையும், சாம் கரண் 41 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக ஹர்ஷித் ராணா மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 11.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் இந்திய அணி இரண்டாவது மோசமான தோல்வியை சந்தித்தது.
அதாவது சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட்டான இரண்டாவது தோல்வியாக பதிவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதுவே இந்திய அணி குறைந்த ரன்களுக்கு சுருண்ட போட்டியாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க : கம்பீருக்கே இது தப்புன்னு தெரியும்.. சஞ்சு சாம்சனின் நீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய – ரவிச்சந்திரன் அஷ்வின்
அதனை தொடர்ந்து நேற்றைய இந்த இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 76 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது மோசமான தோல்வியை இந்திய அணி பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.



