இந்திய டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு சூரியகுமார் வெளியிட்ட – இமோஷனல் பதிவு

Suryakumar Yadav
- Advertisement -

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அங்கு அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட இருக்கிறது. இந்த 2 தொடர்களுக்குமான 16 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்திய அணியை வாழ்த்திய சூரியகுமார் யாதவ் :

அதில் கடந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன் சூரியகுமார் யாதவ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டனை நீக்கி விட்டு புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரை மாற்றியுள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தான் இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் எதிர்வரும் இந்த இரண்டு டி20 தொடர்களிலும் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு நெகிழ்ச்சியான கருத்தை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் அவர் குறிப்பிட்டதாவது :

திறமை வாய்ந்த இந்திய அணி இது. வரவிருக்கும் சவால்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நிச்சயம் அடுத்தடுத்த தொடர்களிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று சூரியகுமார் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சச்சினின் சாதனையை சமன் செய்ய நெருங்கும் சுப்மன் கில்.. அசத்தலான ஆட்டம் – விவரம் இதோ

கடந்த ஓராண்டாகவே அவர் கேப்டன்சியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பையை வென்றிருந்தாலும் தனிப்பட்ட வகையில் அவருடைய பேட்டிங் ஃபார்ம் படுமோசமாக இருப்பதனாலே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் இந்திய அணியை வாழ்த்திய சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ள பதிவு பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement