இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை ராகுல் டிராவிடுக்கு பின்னர் சத்தீஸ்வர் புஜாரா கடந்த பல ஆண்டுகளாகவே மூன்றாவது இடத்தில் நிலையான வீரராக விளையாடி வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே புஜாரா டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட வேளையில் அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தார். இதன் காரணமாக இந்திய அணி பல்வேறு வீரர்களை மூன்றாம் இடத்தில் பயன்படுத்தி பார்த்தது. ஆனாலும் அந்த இடத்தினை யாரும் நிலையாக பிடித்ததில்லை.
சாய் சுதர்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும் : கவுதம் கம்பீர்
கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தமிழக வீரரான சாய் சுதர்சன் மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடினார். ஆனாலும் அவர் இதுவரை விளையாடியுள்ள 11 இன்னிங்ஸ்களில் வெறும் 27 சராசரியுடன் 302 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதிலும் அவர் இரண்டு அரை சதங்களை மட்டுமே அடித்துள்ளார். இதன் காரணமாக அவர் மூன்றாவது இடத்தில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்றாம் இடத்தில் களமிறங்கப் போகும் வீரர் யார்? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் கூறுகையில் : சாய் சுதர்சனுக்கு இன்னும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் பெரும்பாலும் இங்கிலாந்து மண்ணிலேயே விளையாடியுள்ளார்.
எனவே அவருக்கு நீண்ட ஒரு வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம். டெஸ்ட் அணியை பொருத்தவரை 11 வீரர்களை மட்டுமே நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். சாய் சுதர்சன் மோசமான பார்மில் இல்லை. நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் கூட அவர் 700-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். நான்கு, ஐந்து போட்டிகளை வைத்து ஒரு வீரரை மதிப்பிடக்கூடாது.
இதையும் படிங்க : ரிஷப் பண்டை டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது ஏன்? – கம்பீர் விளக்கம்
அவர்களுக்கு உண்டான சரியான வாய்ப்பை வழங்க வேண்டும். அந்த வகையில் சாய் சுதர்சன் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் விளையாடுவார் என்ற கம்பீர் உறுதி செய்துள்ளார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவரே மூன்றாவது வீரராக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.



