கேப்டன் இன்.. துணை கேப்டன் அவுட்.. நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் – ஏற்படப்போகும் நிகழ்வு

IND
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணி ஏற்கனவே சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டு விட்டது. டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் அதே அணி இந்த நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய ஒருநாள் அணியில் ஏற்படப்போகும் நிகழ்வு :

ஆனால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி துவங்கும் இந்த ஒருநாள் தொடரானது ஜனவரி 14 மற்றும் ஜனவரி 18 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ வரும் ஜனவரி 3 அல்லது 4-ஆம் தேதி அறிவிக்கும் என்றும் தெரிகிறது. அதன்படி இந்த நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணித்தேர்வில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழலாம் என்றும் அப்படி இந்திய அணியில் நிகழக்கூடிய மாற்றங்கள் என்ன? என்பது குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த வகையில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிட்ட கேப்டன் சுப்மன் கில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவே மீண்டும் திரும்புவார் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் ஆஸ்திரேலிய தொடரின் போது காயமடைந்த துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு வந்தாலும் அதிக உடல் எடை இழப்பு காரணமாக தற்போது அவதிப்பட்டு வருவதால் தசை வலிமை பெறும் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த நியூசிலாந்து தொடரிலும் அவருக்கு முன்னெச்சரிக்கை காரணமாக ஓய்வு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கும், ஆல்ரவுண்டர் பாண்டியாவுக்கும் இந்த தொடரில் பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : இந்த பையனுக்கு சீக்கிரம் ஒருநாள் போட்டியிலும் சேன்ஸ் தாங்க.. அசத்தப்போறான் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

அதேவேளையில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் விளையாடுவார்கள் என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இப்படி குறிப்பிட்ட சில மாற்றங்கள் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் ஏற்படவுள்ளது என்பதனால் இந்திய ஒருநாள் அணியின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

Advertisement