இன்னுமா முன்னேறல.. ஸ்ரேயாஸ் ஐயரால் கடுப்பான கம்பீர்.. தோல்வியால் கில்லிடம் கடிந்த பேச்சு

gautam gambhir
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அக்டோபர் 19ஆம் தேதி பெர்த்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்தியாவை தோற்கடித்தது. மழையால் 26 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியாவுக்கு விராட் கோலி 0, ரோஹித் சர்மா 8, கேப்டன் கில் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அதனால் 25/3 என சரிந்த இந்தியாவுக்கு அக்சர் பட்டேல் – ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாட முயற்சித்தனர். அப்போது 14வது ஓவரை வீசிய ஜோஸ் ஹேசல்வுட் 2வது பந்தை ஷார்ட் லென்த்தில் லெக் சைட் திசையில் வீசினார். இடுப்புயரத்தில் வந்த அந்தப் பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்காமல் விட்டிருந்தால் நடுவர் ஒயிட் கொடுத்திருப்பார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

இன்னுமா முன்னேறல:

இருப்பினும் அதை அடிக்கலாமா வேண்டாமா என்ற இரு மனதுடன் எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் பேட்டில் பந்து உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் கையில் தஞ்சமடைந்தது. அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பிட்ச் பந்தில் அவுட்டாகி பெரிய ரன்கள் குவிக்க தவறியது இந்தியாவின் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. அதைப் பெவிலியனில் பார்த்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக கடந்த காலங்களில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டை இழப்பது ஸ்ரேயாஸ் ஐயரின் பலவீனமாக இருந்தது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் நாளடைவில் அதற்கான பயிற்சிகளை எடுத்து முன்னேறினார். அதை வைத்து 2023 உலகக் கோப்பையில் 500+ ரன்களை அடித்த அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

கடிந்த கம்பீர்:

அப்படிப்பட்ட நிலையில் இப்போட்டியில் அவர் மீண்டும் இந்தியா திண்டாடிய சமயத்தில் ஷார்ட் பிட்ச் பந்தில் அவுட்டானார். அதனால் இன்னும் ஸ்ரேயாஸ் ஐயர் அதில் முழுமையாக முன்னேறலயா? என்ற வகையில் கம்பீர் அருகில் அமர்ந்திருந்த பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக்கிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதே போல ஒட்டுமொத்த இந்திய பேட்ஸ்மேன்களும் சேர்ந்து 26 ஓவரில் 150 ரன்கள் கூட அடிக்காதது தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாக இருப்பது குறித்து – சுப்மன் கில் பேசியது என்ன?

அதனால் போட்டியின் முடிவில் புதிய கேப்டன் சுப்மன் கில்லை பேட்டிங், பௌலிங் பயிற்சியாளர்கள் கோட்டக், மோர்னே மோர்கெல் ஆகியோரை வைத்துக்கொண்டு கௌதம் கம்பீர் கடிந்து பேசினார். ஏனெனில் இந்த வருடம் ரோஹித் தலைமையில் இந்தியா தொடர்ந்து 8 ஒருநாள் போட்டிகளில் வென்றது. ஆனால் சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement