ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிகழ்த்திய சாதனை :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இரண்டாவதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்சில் 248 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 270 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 390 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அந்த அணியின் துவக்க வீரரான ஜான் கேம்பல் 115 ரன்களையும், ஷாய் ஹோப் 103 ரன்களையும் அடித்து அசத்தியிருந்தனர். அவர்கள் இருவரும் அடித்த இந்த சதத்தின் மூலம் 51 ஆண்டு கால சாதனை ஒன்றினை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
அதாவது இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சதம் அடிப்பது இதுவே மூன்றாவது முறை. இதற்கு முன்னதாக கடைசியாக 1974-ஆம் ஆண்டு கிளைவ் லாயிடு மற்றும் கார்டன் கிரீனிட்ஜ் ஆகியோர் இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தனர்.
இதையும் படிங்க : பயமற்ற வெற்றிகரமான இந்தியா என் டீம் இல்ல.. எல்லாத்துக்கும் அவங்க 2 தான் பொறுப்பு.. கம்பீர் பேட்டி
இவ்வேளையில் தற்போது இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஜான் கேம்பல் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் 51 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



