இந்தியாவின் முடிவு சரியே.. ஆனா விராட், ரோஹித் வந்தாலும் ஆஸி தான் ஜெய்க்கும்.. பின்ச் கணிப்பு

Aaron Finch
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை ரோஹித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார்.

இருப்பினும் 2027 உலகக் கோப்பையில் 40 வயதில் அவரால் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே புதிய அணியை உருவாக்குவதற்காக சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்துள்ளது. அதனால் 2027 உலகக்கோப்பையில் ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடுவார்களா என்பது சந்தேகமாகியுள்ளது. எனவே அம்முடிவு பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

சரியான முடிவு:

இந்நிலையில் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்த இந்தியாவின் முடிவு சரியானது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். மேலும் விராட், ரோஹித் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் வெல்லும் என்று அவர் கணித்துள்ளார்.

இது பற்றி ஐசிசி இணையத்தில் பின்ச் பேசியது பின்வருமாறு. “அது சிறந்த தொடராக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக எப்போதும் நல்ல தொடர் அமையும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி தன்னுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கியுள்ளனர் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

ஆஸ்திரேலியா வெல்லும்:

“ஆஸ்திரேலியா – இந்தியா ஆகிய இரு அணிகளையும் நீங்கள் பேப்பரில் பார்க்கும் போது மிகவும் பொருத்தமான போட்டியாளர்களாக இருப்பார்கள். ஆனால் நான் ஆஸ்திரேலியா 2 – 1 என்ற கணக்கில் வெல்லும் என்று சொல்வேன். அதே சமயம் இந்தியா ஒரு சிறந்த அணி என்பதால் வெற்றி உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எப்படி பார்த்தாலும் அது நல்ல தொடராக இருக்கும்”

இதையும் படிங்க: ரோஹித்தும், கோலியும் தொடர்ந்து ஆடணும்னா இதை செய்தே ஆகனும் – சுனில் கவாஸ்கர் கருத்து

“சுப்மன் கில் ஏற்கனவே டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் தன்னை நல்ல கேப்டனாக காண்பித்தார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவரிடம் எந்த வித்தியாசமும் இருக்காது. விராட், ரோஹித் ஆகியோர் இருக்கும் போது அவருக்கு நல்ல அமைதி கிடைக்கும். ஏனெனில் விராட், ரோகித் ஆகியோருடைய இருப்பு நீங்கள் அணியை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்லலாம் என்பதில் களத்திலும் களத்திற்கு வெளியேயும் உதவி செய்யும்” என்று கூறினார்.

Advertisement