பிளான்ல எந்த மாற்றமும் இல்ல.. 4 ஆவது போட்டியிலும் ரிஷப் பண்ட்டோட வேலை இதுதான் – சுப்மன் கில் பேட்டி

Gill and Pant
- Advertisement -

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்து இந்த தொடரில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் களமிறங்குகிறது.

4 ஆவது போட்டியிலும் ரிஷப் பண்ட் தான் கீப்பிங் செய்வார் : சுப்மன் கில்

ஏனெனில் இந்த நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் முழு முனைப்புடன் தயாராகி வருகின்றனர். இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியிருந்தது.

- Advertisement -

ஏனெனில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பும்ரா பந்துவீசுகையில் கைவிரல் பகுதியில் காயமடைந்த ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளாமல் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் மட்டும் செய்திருந்தார். இதன் காரணமாக நான்காவது போட்டியில் ரிஷப் பண்ட் முழுநேர பேட்ஸ்மேனாகவும், துருவ் ஜுரேல் முதன்மை விக்கெட் கீப்பராகவும் இந்திய அணியில் ஒன்றாக இடம் பிடிப்பார்கள் என்று பேசப்பட்டு வந்தது.

மேலும் ரிஷப் பண்டின் கை விரல் காயம் முழுவதுமாக குணமடையாமல் அவரை விளையாட வைக்கக்கூடாது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதேபோன்று நிர்வாகமும் ஒருவேளை ரிஷப் பண்ட்டிற்கு காயம் குணமடையவில்லை என்றால் அவரை முழுநேர பேட்ஸ்மனாக விளையாட வைத்து துருவ் ஜுரேலை விக்கெட் கீப்பராக இணைக்கலாம் என்று திட்டமிட்டதாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் நான்காவது போட்டியிலும் ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என்பதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வழக்கம்போல் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பணியை நான்காவது போட்டியிலும் ரிஷப் பண்ட் தான் தொடர்வார். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

இதையும் படிங்க : கருண் நாயர் மீது எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. அவர் 4 ஆவது போட்டியிலும் ஆடுவார் – உறுதிசெய்த கேப்டன்

அவர் தற்போது கீப்பிங் செய்யும் அளவிற்கு உடற்தகுதியை எட்டி விட்டார். அதனால் அவரே தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுவார் என கூறியிருந்தார். இதை வைத்துப் பார்க்கையில் : நாளைய நான்காவது போட்டியிலும் ரிஷப் பண்ட் இடம்பெற இருக்கிறார். இதனால் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதும் நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக யார் விளையாட போகிறார்கள்? என்பதும் நாளை தெரியவரும்.

Advertisement