ஒருவழியா உச்சத்தை தொட்டுள்ள ராகுல் 50 நெருங்காம விடக்கூடாது.. டெக்னிக்கல் மாற்றம் பற்றி சாஸ்திரி பேட்டி

Ravi Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்குகிறது. அந்தப் போட்டியில் தொடரை சமன் செய்ய இந்தியா நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது.

முன்னதாக இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றதால் இந்தியா தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியிலேயே 5 சதங்களை அடித்த இந்தியா 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக தற்போதைய பேட்டிங் வரிசையில் அதிக அனுபவத்தைக் கொண்டுள்ள கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

உச்சத்தில் ராகுல்:

இதுவரை 3 போட்டிகளில் 2 சதங்கள் அடித்துள்ள ராகுல் 375* ரன்கள் குவித்து விராட், ரோஹித் இல்லாதக் குறையை பூர்த்தி செய்து வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் திறமையிருந்தும் இத்தனை நாட்களாக தடுமாறிய கேஎல் ராகுல் 35.30 என்ற பேட்டிங் சராசரியை மட்டுமே வைத்துள்ளதாக ரவி சாஸ்திரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள ராகுல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 50 சராசரியை நெருங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தனது பேட்டிங்கில் ராகுல் செய்த டெக்னிக்கல் மாற்றம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு. “ராகுல் திறமைசாலி இல்லை என்று சொன்னவர் உலகில் யாருமில்லை என நினைக்கிறேன். ஆனால் திறமையிருந்தும் ராகுல் அதற்குத் தகுந்தார் போல் செயல்படாதது மக்களுக்கு ஏமாற்றமளித்த விஷயமாக இருந்தது. இருப்பினும் இந்தத் தொடரில் நீங்கள் ராகுலின் சிறந்த ஆட்டத்தைப் பார்க்கிறீர்கள்”

- Advertisement -

சராசரி 50 நெருங்கணும்:

“தற்போது அவர் பந்தை தடுக்கும் போது தன்னுடைய முன்னங்காலில் சில மாற்றங்களை செய்துள்ளதை நான் பார்க்கிறேன். அது கொஞ்சம் திறந்துள்ளது. அது அவருடைய முதுகு தெளிவாக வருவதற்கு உதவுகிறது. அதனால் மிட் விக்கெட்டில் அடிக்கும் போது கூட ராகுல் நடு பேட்டில் அடிக்கிறார். நல்ல டெக்னிக்கை கொண்டுள்ள அவரிடம் நகரும் பந்துகளை எதிர்கொள்ளும் திறமையும் இருக்கிறது”

இதையும் படிங்க: இந்த ஒன்னு போதாதா? தகுதியான சுப்மன் கில்லை நாம் சிறந்த இந்திய கேப்டனாக பார்ப்போம்.. வில்லியம்சன் பேட்டி

“தற்போது உச்சத்தைத் தொட்டுள்ள ராகுல் இதை அடுத்த 3, 4 வருடங்கள் தொடர வேண்டும். அவர் நிறைய சதங்கள் அடிப்பதை நான் பார்க்கப் போகிறேன். ஏனெனில் அவர் இந்தியாவில் நிறைய கிரிக்கெட்டை விளையாடப் போகிறார். எனவே இப்போது அவரின் சராசரி எதுவாக இருந்தாலும் அது 50 நெருங்க வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement