இப்படி செஞ்சா கோபம் வராதா? 4வது நாளில் அனல் பறக்கும்.. கிராவ்லியுடன் மோதிய காரணம் பற்றி ராகுல்

Kl rahul 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்களை குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இந்தியாவும் முடிந்தளவுக்கு போராடி 387 ரன்கள் அடித்ததால் ஸ்கோர் சமநிலை பெற்றது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

யாருக்கு தான் கோபம் வராது:

அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து 2, 3வது ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போது ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய ஒரு பந்தை ரசிகர்களின் பிம்பம் தொல்லை செய்வதாக சொல்லி ஜாக் கிராவ்லி எதிர்கொள்ளாமல் விலகினார். அதனால் கடுப்பான பும்ரா வீசிய மற்றொரு பந்து அவருடைய கையில் லேசாக மட்டுமே பட்டது.

ஆனால் அது மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியதை போல் வெளிப்படுத்திக் கொண்ட கிராவ்லி இங்கிலாந்து அணியின் மருத்துவரை வர வைத்து நேரத்தை வீணடித்தார். அதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் கில் அவரிடம் சென்று காரசாரமாக வாக்குவாதம் செய்தார். அதே போல மற்ற இந்திய வீரர்களும் இங்கிலாந்து வீரர்களை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை உண்டாக்கியது.

- Advertisement -

4வது நாளில் அனல் பறக்கும்:

இந்நிலையில் வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாலயே கிராவ்லியிடம் இந்திய அணியினர் வாக்குவாதம் செய்ததாக ராகுல் தெரிவித்துள்ளார். அவருக்கும் இங்கிலாந்துக்கும் 4வது நாளில் அனலாக பவுலிங் செய்து பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கும் ராகுல் இது பற்றி பேசியது பின்வருமாறு. “6 நிமிடங்கள் மீதமிருந்ததால் 2 ஓவர்களை வீசாமல் இருக்க எந்த அணியும் மூளையற்றவர்கள் கிடையாது”

இதையும் படிங்க: சுப்மன் கில் மசாஜ் எடுத்ததை விடவா மோசம்? இந்திய அணிக்கு இங்கிலாந்து கோச் சௌதீ பதிலடி

“அதனால் 3வது நாள் முடிவு திரைப்படம் போல முடிந்தது. நாள் முழுவதும் ஃபீல்டிங் செய்த பேட்ஸ்மேன் நாளின் இறுதியில் வந்து 2 ஓவர்களை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு விக்கெட் விழுந்திருந்தால் எங்களுக்கு கச்சிதமாக அமைந்திருக்கும். இல்லையென்றாலும் நாளை நாங்கள் அனலாக செயல்படுவோம். அவ்வாறு நடந்தது விளையாட்டின் ஒரு அங்கம். ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான எனக்கு கடைசி 5 நிமிடங்களில் கிராவ்லி எப்படி இருந்திருப்பார் என்பது தெரியும். அது அனைவருக்குமே தெரியும்” என்று கூறினார்

Advertisement