வம்பிழுத்த கோன்ஸ்டஸ்க்கு பேட்டால் ஜெய்ஸ்வால் முரட்டு அடி.. ஸ்லெட்ஜ் செய்த ஸ்டார்க்கிற்கு மாஸ் பதிலடி

Jaiswal
- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 184 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 2014க்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

முன்னதாக அந்தப் போட்டியில் 340 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட ஏனைய அனைத்து பேட்ஸ்மேன்களும் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார்கள். ஆனால் 22 வயதாகும் ஜெய்ஸ்வால் நங்கூரமாக விளையாடி இந்தியா அடித்த 155 ரன்களில் தனியாளாக 82 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். சொல்லப்போனால் முதல் இன்னிங்சிலும் 82 ரன்கள் அடித்த அவர் இந்தியாவுக்காக முழு மூச்சுடன் போராடினார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஸ்டார்க்கிற்கு பதிலடி:

அப்படிப்பட்ட அவரை அவுட்டாக்குவதற்காக மிட்சேல் ஸ்டார்க் பெய்ல்ஸை மாற்றி வைத்தார். அதற்காக அசராத ஜெய்ஸ்வால் உடனடியாக மீண்டும் பெய்ல்ஸை ஏற்கனவே இருந்த பழைய இடத்தில் மாற்றி வைத்தார். அதைப் பார்த்து சிரித்த ஸ்டார்க் “உங்களுக்கு மூடநம்பிக்கை இல்லையென்றால் ஏன் அதை மாற்றி வைத்தீர்கள்” என்று ஜெய்ஸ்வாலிடம் சொல்லி வம்பிழுத்தார்.

அதற்கு “நான் என்னை நம்புகிறேன். அதனாலேயே நான் இங்கே இருக்கிறேன். நான் மூடநம்பிக்கைகளை நம்புவதில்லை. வாழ்க்கையின் தற்போதைய தருணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன்” என்று சொல்லி அவருக்கு ஜெய்ஸ்வால் நெத்தியடி பதிலைக் கொடுத்தார். இது போக 19 வயதாகும் இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் சில்லி பாயிண்ட் திசையில் ஜெயஸ்வால் அருகே ஃபீல்டிங் செய்தார்.

- Advertisement -

பேட்டால் முரட்டு அடி:

அப்போது அவருடைய கவனத்தை சீர்குலைப்பதற்காக கோன்ஸ்டஸ் தேவையின்றி ஏதாவது பேசி கடுப்பேற்றினார். அதனால் கோபமடைந்த ஜெய்ஸ்வால் “வாயை மூடிக் கொண்டு உங்களுடைய வேலையை செய்யுங்கள்” என்று அவருக்கு பதில் கொடுத்தார். ஆனால் அப்போதும் கோன்ஸ்டஸ் தன்னுடைய வார்த்தைகளை நிறுத்துவதாக இல்லை.

இதையும் படிங்க: அதுல கோலியுடன் கம்பேர் பண்ண தகுதியற்ற ரோஹித்தை டீம்ல இருந்து அவரால் தான் தூக்க முடியும்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

அதனால் வார்த்தை வேலையாகாது என்று முடிவெடுத்த ஜெய்ஸ்வால் அடுத்த பந்தை வேண்டுமென்றே கோன்ஸ்டஸ் உடம்பில் மேல் படுமாறு இழுத்து முரட்டுத்தனமாக அடித்தார். அதனால் அடி வாங்கிய கோன்ஸ்டஸ் அது வெளியே தெரியாத வகையில் வலியுடன் பந்தை எடுத்து போட்டார். அந்த வகையில் அவருக்கும் ஜெய்ஸ்வால் பேட்டால் மாஸ் பதிலடி கொடுத்தார். மொத்தத்தில் நல்ல திறமையும் ஆக்ரோஷமும் கொண்ட தரமான வீரராக ஜெயஸ்வால் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement