இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த 26 வயது இளம் வீரரான சர்பராஸ் கான் இந்திய அணிக்காக 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்தே விளையாடி வருகிறார். அதோடு கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வரும் அவர் 9 ஆண்டுகளாக இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருந்து இந்த ஆண்டுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பல்வேறு வீரர்கள் காயமடைந்த அதன் காரணமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படி தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பில் மூன்று போட்டிகள் மூன்று அரை சதத்துடன் 200 ரன்கள் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மீண்டும் அவருக்கு அணியில் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப்மெ பண்ட் என பேட்டிங் வரிசை கட்சிதாமாக இருக்கிறது.
இதன் காரணாமாக தற்போதைக்கு ஒரு வீரரை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவரை சேர்ப்பது கடினமான விடயமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மாற்று வீரராக இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் தனக்கு கிடைத்த மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடிவிட்டு மீண்டும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு அவர் சென்றுள்ளார்.
இது குறித்து பேசி அவர் கூறுகையில் : வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் எனக்கு இடம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னுடைய பணியை செய்து அந்த தொடர்காக தயாராக இருப்பேன். எதிர்வரும் இந்த சில நாட்களில் துலீப் டிராபி மற்றும் புஜ்ஜி பாபு தொடர்களில் விளையாட உள்ளேன்.
இதையும் படிங்க : 17 விக்கெட்ஸ்.. 63 ரன்ஸ்.. கடுப்பேற்றிய டெயில் எண்டர்கள்.. மிரட்டிய வெ.இ அணியை திருப்பி அடிக்கும் தெ.ஆ
இந்த 2 தொடர்களிலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். நான் எனது வாய்ப்புக்காக எப்போதுமே காத்துக்கொண்டிருப்பேன். இதைத்தான் நீண்ட காலமாக செய்து வருகிறேன். மீண்டும் அதையே செய்ய இருக்கிறேன் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என சர்பராஸ் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.



