ரசிகர்களுக்கு நன்றி.. ஏஆர் ரஹ்மான் ஸ்டைலில் துவங்கிய சூரியகுமார்.. இந்திய டி20 கேப்டனாக கொடுத்த முதல் மெசேஜ்

Suryakumar Yadav
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சொல்லப்போனால் ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஏனெனில் 2022க்குப்பின் ரோகித் சர்மா ஓய்வெடுத்த காலங்களில் இந்தியா விளையாடிய பெரும்பாலான டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நன்றாக செயல்பட்ட பாண்டியா வெற்றியில் பங்காற்றினார். இருப்பினும் காயம் காரணமாக அவர் இந்தியா விளையாடும் அனைத்து தொடர்களிலும் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

- Advertisement -

சூர்யாகுமாரின் மெசேஜ்:
அதனால் 2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு பணிச்சுமையை பற்றி கவலைப்படாமல் விளையாடக்கூடிய ஒருவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விரும்பினார். அது போன்ற சூழ்நிலையில் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாகவே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். மேலும் எதிரணி எப்படி போட்டாலும் அதை அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

அந்த வகையில் இந்திய டி20 அணியில் சூரியகுமார் இன்றியமையாத வீரராக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் கௌதம் கம்பீரின் பரிந்துரையை ஏற்று தேர்வுக்குழு சூர்யகுமாரை புதிய டி20 கேப்டனாக முடிவை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டுக்காக விளையாடுவதே மிகப்பெரிய கௌரவம் என்ற நிலையில் கேப்டனாக செயல்படுவது வார்த்தைகளால் விவரிக்க முடியாத விஷயம் என சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த எக்ஸ்ட்ரா வேலையில் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றிக்கு பங்காற்றுவேன் என்று தெரிவிக்கும் அவர் எல்லா புகழும் இறைவனுக்கே என்று ஏஆர் ரகுமான் ஸ்டைலில் ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் சூரியகுமார் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வாழ்த்துக்களை பொழிந்ததற்கும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி”

இதையும் படிங்க: 2025இல் காட்டுறேன்.. இந்தியாவை பத்தி பேசுறதுக்கு முன்னாடி பாகிஸ்தானின் சீட்டிங்கை பேசுங்க.. இன்சாமுக்கு ஷமி பதிலடி

“கடந்த சில வாரங்களில் கனவுக்கும் குறைவில்லாமல் நடந்த அம்சங்களுக்காக நான் உண்மையிலேயே நன்றியுடையவனாக உள்ளேன். நாட்டிற்காக விளையாடுவது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத சிறப்பு உணர்வு. தற்போது கேப்டன் என்ற புதிய பாத்திரம் நிறைய பொறுப்பையும் உற்சாகத்தையும் தருகிறது. அதில் தொடர்ந்து உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் பெறுவேன் என்று நம்புகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே. கடவுள் பெரியவர்” என்று கூறினார்.

Advertisement