- Advertisement -
டி20

5 விக்கெட், 4 ரன்கள் மட்டும், அசத்திய 17 வயது இளம் வேகபந்து வீச்சாளர்

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் “பாகிஸ்தான் சூப்பர் லீக்” இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெறும் 17 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன்- ஷா- அப்ரீடி மொத்தம் தான் வீசிய 3.4ஓவரில் நான்கு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.நேற்றைய பாகிஸ்தான் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் – லாகூர் குவாண்டர்ஸ் அணிகள் விளையாடின. முல்தான் சுல்தான்ன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஒருகட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 13 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்தது. இந்நிலையில் தான் 14-வது ஓவரை வீச ஷஹீன் ஷா அப்ரீடி வந்தார். 6 அடிக்கும் உயரமான ஷஹீன்ஷா இடது கை வேகப்பந்து வீச்சாளர்.இவர் வீசிய முதல் ஓவரில் மொத்தமே இரண்டு ரன்கள் தான் விட்டுக்கொடுத்தார். மீண்டும் ஆட்டத்தின் 16-வது ஓவரில் ஷஹீன் ஷா அப்ரீடி தனது இரண்டாவது ஓவரை வீசினார்.

- Advertisement -

இரண்டாவது ஓவரின் முடிவில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அட்டகாசமாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த ஓவரில் முல்தான் சுல்தான்ஸ்க்கு கிடைத்த இரண்டு ரன்களும் காலில் பட்டு எடுத்ததால் அது ஷஹீன் ஷா அப்ரீடிக்கு மெய்டனாக அமைந்தது.

மீண்டும் 18-வது ஒவரில் பந்துவீச அழைக்கப்பட்டார் ஷஹீன் ஷா அப்ரீடி. 18வது ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தது மட்டுமில்லாமல் அந்த ஓவரில் 1 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கலக்கினார். ஆட்டத்தின் இறுதி ஓவரையும் இவரே வீச இந்த ஓவரிலும் இரண்டு விக்கெட்களை அள்ள முல்தான் சுல்தான்ஸ் அணி 19.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்களை இழந்து ஆட்டமிழந்தது.

இந்த போட்டியில் ஷஹீன் ஷா அப்ரீடி தான் மொத்தம் வீசிய 3.4 ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். ஒரு கட்டத்தில் 93 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த சுல்தான் முல்தான்ஸ் அணி இறுதியில் 19.4 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது.

- Advertisement -