- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சிறப்பாக செயல்பட்டும் டி20 உலககோப்பையில் வாய்ப்பை இழக்கப்போகும் 4 இந்திய வீரர்களின் பட்டியல்

ஆஸ்திரேலிய மண்ணில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதில் கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் லீக் சுற்றுடன் நடையை கட்டிய இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதற்காக முழுநேர கேப்டன் பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் தங்களது தலைமையில் விளையாடப்போகும் அணியை கடந்த சில மாதங்களாகவே கட்டமைத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு அதன்பின் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் ஆகிய தொடர்களில் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர்களில் அசத்தினால் தங்களுக்கு டி20 உலக கோப்பையில் என்ற நம்பிக்கையில் நிறைய வீரர்கள் தங்களால் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

சிறப்பாக செயல்பட்டும்:
இருப்பினும் சில வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அணியில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக உலக கோப்பைக்கான இந்திய அணியில் நூலிழையில் வாய்ப்பை இழக்கப் போவதை பற்றி பார்ப்போம்:

4. ஷ்ரேயஸ் ஐயர்: வளர்ந்து வரும் நம்பிக்கையை நட்சத்திர இளம் வீரராகக் கருதப்படும் இவர் கடந்த பிப்ரவரியில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்து ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். அதனால் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்த அவர் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் இந்தியா பங்கேற்ற டி20 தொடர்களில் நிறைய தருணங்களில் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதுவும் சில சமயங்களில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி பின்னடைவை ஏற்படுத்தும் அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறுகிறார். ஆனால் சுழல் பந்துவீச்சை வெளுத்து வாங்கும் இவர் ஷார்ட் பிட்ச், பவுன்ஸ் ஆகிய அம்சங்களுக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் தனது இடத்தை இழப்பது உறுதியாகிவிட்டது. அதுபோக அவர் விளையாடக் கூடிய 3, 4 ஆகிய இடங்களில் விளையாட சூர்யகுமார் யாதவ் தயாராக இருக்கிறார்.

3. ரவிச்சந்திரன் அஷ்வின்: ஒரு காலத்தில் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக இருந்த இவர் 2017க்குப்பின் மொத்தமாக கழற்றிவிடப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் கடந்த 2021இல் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் 4 வருடங்கள் கழித்து ஆச்சரியப்படும் வகையில் தேர்வு செய்யப்பட்டார். அதில் முழுமையான வாய்ப்பை பெறாத அவர் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் இடையே 8 மாதங்கள் கழற்றிவிடப்பட்டு தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

சமீப காலங்களில் பேட்டிங்கிலும் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ள அவர் குறைவான ரன்களைக் கொடுத்து பந்து வீசுபவராக இருந்தாலும் கேப்டனுக்கு விக்கெட் தேவைப்படும்போது அதை செய்யும் பவுலராக செயல்படுவதில்லை. மேலும் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்ற பேட்டிங் செய்யக்கூடிய சுழல் பந்து வீச்சாளர்களும் சஹால் போன்ற முதன்மை சுழல் பந்து வீச்சாளரும் இருப்பதால் கடந்த 2021 டி20 உலகக்கோப்பைக்கு பின் விளையாடிய டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும் இவருக்கு வரும் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு நூலிழையில் பறி போவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

2. ஹர்ஷல் படேல்: ஐபிஎல் 2021 தொடரின் ஊதா தொப்பியை வென்று அதன் வாயிலாக இந்திய அணியில் இடம்பிடித்த இவர் கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்துவீசும் பவுலராக போற்றப்படுகிறார். ஆனால் சமீப காலங்களில் இவரின் பந்துவீச்சை கணிக்கும் எதிரணி பேட்ஸ்மென்கள் சரமாரியாக அடிக்கிறார்கள். அதனால் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் விளையாடக் கூடியவராக பார்க்கப்பட்ட இவரது இடத்தில் லேட்டஸ்டாக அறிமுகமாகியுள்ள அர்ஷிதீப் சிங் இவரைவிட அசத்தலாக செயல்படுவதுடன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

- Advertisement -

மேலும் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் டி20 இடம்பிடித்துள்ள இவர் காயத்தால் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையிலிருந்து வெளியேறப் போகிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. அதனால் கடைசி நேரத்தில் இவருக்கு பதில் அர்ஷிதீப் சிங் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.

1. தீபக் ஹூடா: கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்காக அறிமுகமாகி சமீபத்திய ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் அசத்திய இவர் அதன்பின் நடந்த அயர்லாந்து டி20 தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி சதமடித்து அசத்தினார். அதை தொடர்ந்து நடந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களிலும் அசத்தலாக செயல்பட்டு வரும் இவர் பகுதிநேர பந்து வீச்சிலும் அசத்துகிறார்.

இப்படி சிறப்பாக செயல்பட்டும் உலக கோப்பையில் விளையாடப்போகும் முதன்மையான இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் திரும்பும்போது இவருக்கு அதிகபட்சமாக பெஞ்சில் அமரும் வாய்ப்பு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் விராட் கோலி வருகிறார் என்பதற்காக இவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

- Advertisement -