- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சி.எஸ்.கே அணியில் விளையாடிய பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த – 3 இந்திய வீரர்கள்

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே அணி திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை அணியானது அதிக முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மும்பை அணியின் சாதனையை சமன் செய்து ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதுமட்டும் இன்றி சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சிஎஸ்கே அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.

இப்படி ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணியாக திகழும் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே தோனியின் கேப்டன்சி தான் என்றால் அதுமிகையல்ல. அவரது தலைமையின் கீழ் சென்னை அணி இதுவரை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது வாய்ப்பை இழந்த வீரர்களை மீண்டும் அணிக்குள் இணைத்து அவர்களை சூப்பர் ஸ்டாராக மாற்றும் அணியாகவும் சென்னை அணி திகழ்ந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஃபார்ம் அவுட்டாகி வாய்ப்பை இழந்து பின்னர் சிஎஸ்கே அணியில் நன்றாக விளையாடிய மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த மூன்று வீரர்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 1) அஜின்க்யா ரஹானே : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரஹானேவை சென்னை அணி தேர்வு செய்த போது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஏனெனில் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை அவரது மோசமான பார்ம் காரணமாக எந்த ஒரு அணியுமே கடந்த ஆண்டு அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

ஆனாலும் அவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. தனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரகானே இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 172 என்கிற பிரம்மாண்டமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 326 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதன் காரணமாக அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இழந்த இடம் மீண்டும் கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை தொடருகான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

2) ஆஷிஷ் நெஹ்ரா : 2011 ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட அவர் அதற்கு அடுத்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று கடினமாக போராடி வந்தார். ஆனாலும் அவரை இந்திய அணி கண்டு கொள்ளவில்லை இந்நிலையில் 2014-ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் 20 போட்டிகளில் 30 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 2016 ஆம் ஆண்டு அவர் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார்.

அதோடு அந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரிலும் விளையாடிய அவர் அதற்கு அடுத்த 2017-ஆம் ஆண்டு டெல்லியில் அவர் சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் ரசிகர்கள் மத்தியில் பிரியாவிடை பெற்றது குறிப்பிடத்தக்கது. 3) அம்பத்தி ராயுடு : 2016 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடி வந்த ராயிடு அதன் பிறகு 2017-ஆம் ஆண்டு வாக்கில் இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு அவர் சென்னை அணிக்கு இடம் மாறியதில் இருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக அந்த 2018 ஆம் ஆண்டு தொடரில் 602 ரன்கள் குவித்து அசத்தவே மீண்டும் அதே ஆண்டு அவரை இந்திய அணி இணைத்துக் கொண்டது. அப்போது நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்ற போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு ஒரு போட்டியின் சதமும் ஒரு போட்டியில் 90 ரன்களும் குவித்து அசத்தியிருந்தார்.

இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் ஃபார்ம் அவுட்டான வீரர்களை கூட மிகச் சிறப்பான கம்பேக் கொடுக்க வைப்பதில் சி.எஸ்.கே அணி கில்லாடி என்பதற்கு இவர்களே ஒரு சான்று.

- Advertisement -
Published by