டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த – 3 திறமைசாலிகள்

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் துவங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளையும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்தது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாடுகளும் தங்களது அணிகளை அறிவிக்க கடந்த 8ஆம் தேதி இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் சில வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பும், சில வீரர்களுக்கு அதிர்ச்சி நீக்கமும் இருந்தது.

IND

- Advertisement -

அந்த வகையில் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வுபெற தகுதியான மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அப்படி திறமை வாய்ந்த அந்த மூன்று வீரர்கள் பற்றிய பதிவு தான். ஷிகர் தவான் : இந்திய அணியின் சீனியர் துவக்க வீரரான இவர் ரோகித் சர்மாவுடன் இணைந்து பல ஆண்டுகளாக ஓப்பனராக விளையாடி வருகிறார். இருப்பினும் சமீபத்தில் அவரது டி20 பார்மை கருத்தில் கொண்டு அவரை நீக்கி ரோஹித்துடன் ராகுலை இந்திய அணி களமிறக்கி வருகிறது.

ஆனால் ஐபிஎல் தொடரிலும் சரி, நடைபெற்று முடிந்த இலங்கை தொடரில் சரி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் எப்போதுமே ஐசிசி தொடர்களில் ரன்களை குவிக்க கூடியவர் என்பது நாம் அறிந்த.

Dhawan

வாஷிங்டன் சுந்தர் : தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் டி20-க்கான அணியில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டி20 அணியின் மறுக்க முடியாத வீரராக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் பவர்பிளே ஓவர்களில் பந்து வீசுவது மட்டுமின்றி விக்கெட் வீழ்த்தும் திறனையும் பெற்றிருந்தார். தொடர்ச்சியாக அணியில் சிறப்பாக விளையாடிய அவருக்கு தற்போது காயம் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sundar-1

யுஸ்வேந்திர சாகல் : இந்திய அணியின் தற்போதைய திறமைவாய்ந்த லெக் ஸ்பின்னர் என்றால் அது சாகல் மட்டும் தான். கடந்த பல ஆண்டுகளாகவே தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி வந்த சாகல் தோனியின் ஓய்வுக்குப் பிறகு சற்று மந்தமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் சற்று மந்தமான நேரத்தில் ராகுல் சாகர், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் என அனைவரும் தங்களது திறமை நிரூபித்ததால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement