இந்திய – இங்கிலாந்து முதல் டீ20 போட்டி..! 6 புதிய சாதனைகள் படைக்க காத்திருக்கும் இந்தியா.! – விவரம் உள்ளே

dhoni

ஐயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தன்னம்பிக்கையுடன் இருக்கிறது. அதே போல அனுபவமிக்க ஆஸ்திரேலிய அணியை 5-0 என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்த மிதப்பில் உள்ளது இங்கிலாந்து அணி. இந்நிலையில் இன்று(ஜூன் 3) மாஞ்சிஸ்டர் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி முதல் டி20 போட்டியில் பலப்பரீட்சை செய்யுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னாள் , இந்த இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளை வைத்து ஒரு சிறிய புள்ளிவிவர பகுப்பாய்வு ஒன்றை காணலாம்.

* இதுவரை இந்த இரு அணிகளும் பதினோரு டி20 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் 6 போட்டிகளில்
இங்கிலாந்து அணியும், 5 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.

* இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து அணியின்
இயன் மார்கன் அதிகபட்சமாக 284 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின்
சுரேஷ் ரெய்னா 265 ரன்களும் தோனி 264 ரன்களும் குவித்துள்ளனர்.

* அதே போல இதுவரை இந்த இரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக விக்கெட்குளை பெற்ற
பட்டியலில் இந்திய அணியின் ஹர்பஜன் மற்றும் சஹால் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 8
விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
england
* டி20 வரலாற்றில் 2000 ரன்களை குவிக்க கோலிக்கு 8 ரன்களும் , ரோஹித் ஷர்மாவிற்கு 51 ரன்களும்
தேவைப்படுகிறது. ஒரு வேலை இவர்கள் இருவரில் ஒருவர் 2000 ரன்களை கடக்கும் பட்சத்தில், இந்திய
அணியில் டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்கள்.

* இந்த போட்டியில் 45 ரன்களை குவிக்கும் பட்சத்தில் டி20 போட்டியில் 1500 ரன்களை கடந்த 4 வது இந்திய
வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னாள் இந்த வரிசையில் ரோஹித் ,கோலி மற்றும் ரெய்னா
ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

* தோனி இன்னும் ஒரு கேட்ச் மட்டும் பிடித்து விட்டால், டி20 போட்டியில் 50 கேட்ச் பிடித்த விக்கெட்
கீப்பர் என்ற பெருமையை பெறுவார். இந்த பட்டியலில் இவருக்கு பின்னல் மேற்கிந்திய அணியின் கீப்பர்
தினேஷ் ராம்தின் 34 கேட்ச்களுடனும், இங்கிலாந்து அணியின் குவன்டன் டி காக் 30 கேட்ச்களுடனும்
இருக்கின்றனர்.