சென்னை வந்தடைந்த தல தோனியின் செல்ல மகள் ஷிவா தோனி – க்யூட் போட்டோ உள்ளே

Ziva
- Advertisement -

சென்னையில் சி.எஸ்.கே அணிவீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியின் கேப்டன் தோனியும் சென்னையில் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தல தோனியின் செல்ல மகளான ஷிவா தோனி இன்று சென்னை வந்தார். சென்னை வந்த தோனியின் மகளின் புகைப்படத்தினை தற்போது சென்னை அணி நிர்வாகம் டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம் :

- Advertisement -

தோனியும் சரி, தோனியின் மகளும் சரி எது செய்தாலும் இணையத்தில் படு வைரலாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் தொடரின்போது தோனியுடன் அவரது மகள் விளையாடிய வீடியோ இணையத்தில் படு ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அவரது மகள் நன்றாக வளர்ந்தும், பேசவும் ஆரம்பித்துவிட்டார்.

இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த 12வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கான சென்னை அணி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

Rayudu

கடந்த 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியது. அதனை அடுத்து இந்த ஆண்டும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி உத்வேகம் காட்டும் என நம்பப்படுகிறது.

Advertisement