யுவ்ராஜ் சிங்- கை அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்க இதுதான் காரணம் – ஜாகீர் கான் பேட்டி

Zaheer
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். தற்போது 37 வயது ஆகும் யுவராஜ் சிங் இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது சற்று சிரமம் தான். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் ஏலத்தில் யுவராஜ் சிங்-கை முதல் நாளில் யாரும் ஏலம் எடுக்கவில்லை.

Yuvraj

- Advertisement -

ஒரு காலத்தில் பல கோடிகளுக்கு ஏலம் போன யுவராஜ் இந்த ஆண்டு அடிப்படை விலையான 1 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. எந்த அணியும் ஏலம் எடுக்க நினைக்காத போது மும்பை அணி யுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கு ஏலம் எடுத்தது. டி20 போட்டிகளில் ஆரம்ப காலத்தில் சிறந்த அதிரடி வீரராக திகழ்ந்தவர்.

இதுகுறித்து பேசிய ஜாஹீர் கான் கூறியதாவது : யுவராஜ் சிங்கை மும்பை அணி அடிப்படை விலையான 1 கோடிக்கு ஏலம் எடுத்தது சேரந்த முடிவே. ஏனெனில் யுவராஜ் அதிரடியாக ஆடும் திறமையை உடையவர். மேலும், அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை உடையவர் யுவராஜ்.

YuvrajSingh

அவரால் இன்னும் சிறப்பான ஆட்டத்தை தரமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் தனியாக நின்று அணிக்கு வெற்றி தேடித்தரும் திறமையும் அவரிடம் உள்ளது எனவே அவரை அடிப்படை விலைக்கு ஏலம் எடுத்தோம் என்று ஜாஹீர் கான் தெரிவித்தார்.

Advertisement