ஜப்பான் வீரர்களின் செயலை கண்டு நெகிழ்ந்து போன யுவராஜ் சிங்..! – காரணம் இதுதான்..?

yuvi
- Advertisement -

ரஸ்சியாவில் நடைபெற்று வரும் உலக கால் பந்து போட்டியில் ஜப்பான் செய்த காரியத்தை கால் பந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றாரனார். தொடரில் இருந்து வெளியேறி தாய் நாட்டிற்கு திரும்பும் முன்னதாக ஜப்பான் கால் பந்து வீரர்கள் செய்த செயலை கண்டு இந்திய கிரிக்கெட் வீர்ர் யுவ்ராஜ் சிங் மனம் நெகிழ்ந்துள்ளார்.
yuvraj
ரஸ்சியாவில் நடைபெற்று வரும் உலக கால் பந்து போட்டியில் ஜப்பான் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதிய போட்டி நேற்று (ஜூன் 3) நடைபெற்றது. இந்த போட்டியில் வலுவான அணியான பெல்ஜியம் அணியுடன் ஜப்பான் அணி சிறப்பாக விளையாடியது. ஒரு கட்டத்தில் 2 கோல் அடித்து முன்னிலையில் இருந்த ஜப்பான் அணி , இறுதியில் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

ஜப்பான் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஜப்பான் வீரர்கள் மைதானத்தில் அழுதனர். பின்னர் தங்களது தாய் நாட்டிற்கு செல்வதற்கு முன்பாக தங்களுக்கு ஒதுக்கிய அறைக்குச் சென்ற ஜப்பான் வீரர்கள், அந்த அறையை சுத்தம் செய்தனர். அதன்பின் ரஷிய மொழியில் நன்றி என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு சென்றனர். ஜப்பான் வீரர்கள் செய்த இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -


இந்நிலையில் ஜப்பான் கால் பந்து வீரர்கள் செய்த இந்த செயலை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட யுவ்ராஜ் சிங் “இது தான் விளையாட்டிற்க்கு அளிக்கின்ற உண்மையான மரியாதை, ஜப்பான் வீரர்களின் இந்த தூய்மை நடவடிக்கையை ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும், அணிகளும் உலகில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் ” என்று அந்த பதிவில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Advertisement