CSK அணியுடன் பைனலில் மோத வாய்ப்புள்ள அணி எது..! பலப்பரீட்சை யாருடன்

csk
- Advertisement -

ஐ.பி.எல் போட்டியின் இறுதி போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டி நேற்று (மே 22) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்திய சென்னை அணி வரும் ஞாயிற்றுகிழமை (மே 27) நடைபெற உள்ள இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

chennaifinals

- Advertisement -

தற்போது இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்று போட்டி இன்று (மே 23) கொல்கத்தா, ஹெடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் புள்ளிபட்டியலில் 3வது மற்றும் 4ஆம் இடத்தில இருக்கும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளது.

கொல்கத்தா அணியை பொறுத்த வரை அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். மேலும் அந்த அணியில் உள்ள சுனில் நரேன் அதிரடியாக விளையாடி வருவதுடன் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த அணியின் பேட்ஸ்மேன் கிர்ஸ் லைனின் பேட்டிங் அந்த அணிக்கு ஒரு கூடுதல் பலம்.

kolkatavsrajasthanroyals

ராஜஸ்தான் அணியை பொறுத்த வரை, அந்த அணி பிலே ஆப் சுற்றிற்கு வந்ததே அந்த அணியின் கேப்டன் ரஹானே செய்த அதிர்ஷ்டம் தான். இந்த அணியில் உள்ள தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடிவருகிறார். மேலும் அந்த அணியில் ஆல்ரவுண்டர்களாக ஷ்ரேயாஸ் கோபால், கிருஷ்ணப்பா கௌதம் போன்ற வீரர்களும் கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

Sunrisers-Hyderabad

எனவே சரிக்கு சமமான பலத்துடன் மோதும் இரு அணிகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் இன்று போட்டி நடைபெறும் இதே மைதானத்தில் 25 ஆம் தேதி ஹைதராபாத்தை சந்திக்க வேண்டும். அந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வரும் ஞாற்றுக்கிழமை (மே 27 ) சென்னையுடன் இறுதி போட்டியில் விளையாடும்.

Advertisement