நாகினி சண்டைக்கு பிறகு…ஒரே அணியில் விளையாடப்போகும் இலங்கை மற்றும் வங்கதேச அணி வீரர்கள் யார் தெரியுமா !

rahim
- Advertisement -

நடந்து முடிந்த நிடாஸ்கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பிற்கும் சலசலப்பிற்கும் பஞ்சமில்லை எனலாம். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருபெரும் அணிகள் அமைதியாக விளையாடிட கத்துக்குட்டி அணியான வங்கதேசமோ மைதானத்தில் கிரிக்கெட் மட்டுமில்லாமல் பாம்பு டான்ஸ் ஆடி எதிரணியினரையும் இலங்கை ரசிகர்களையும் வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டுசென்றனர்.

britain

- Advertisement -

வங்கதேச அணியிடம் இந்த தொடரில் இருமுறை இலங்கை அணி தோற்றது. இரண்டு முறையும் இலங்கை ரசிகர்களுக்கு இலங்கை அணி தோற்றதை விட வங்கதேச வீரர்கள் மைதானத்தில் வைத்து செய்த செயல் தான் எரிச்சடலைய வைத்தது எனலாம்.

ஒவ்வொரு முறை வங்கதேச அணி வெற்றிபெற்ற போதும் மைதானத்தில் வெற்றியை கொண்டாடிடும் விதமாக பாம்பு டான்ஸ் ஆடினர். இலங்கையுடனான முதல் லீக்கின் போது வெற்றி பெற்ற போது வின்னிங் ஷாட் அடித்த முஷ்பிகூர் ரஹ்மான் பாம்பு டான்ஸ் ஆடி இலங்கையை அழவிட்டார்.

perrera

கடைசி லீக்கில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போது ஒட்டுமொத்த அணியுமே பாம்பு டான்ஸ் ஆடியது. இதனால் இலங்கை வீரர்கள் கோபமடைந்து மைதானத்திலேயே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது தனிக்கதை.

bangla

இந்நிலையில் இருஅணி வீரர்களும் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இலங்கை வீரர் திசர பெரேராவும், வங்கதேச வீரர் மக்முதுல்லாவும் ஒரே அணிக்காக விளையாட பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

Advertisement