வெளியிலிருந்து நெருக்கடி கொடுக்கிறார்கள்..! உண்மையை உடைத்த ராகுல் ட்ராவிட்..!

Rahul
- Advertisement -

இந்திய ஏ அணி ,இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அதைத்தொடர்ந்த கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைபற்றியது.

Rahul

இதை தொடர்ந்து சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் பங்குபெற்று விளையாடி வந்தது. கடந்த16 ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 423 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து விளையாடிய இந்திய ஏ அணி 197 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சாப்ரில் அதிகபட்சமாக பிரிதிவி ஷா 62 ரன்களும், ரிஷப் பண்ட் 58 ரன்களும் குவித்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 194 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதைதொடர்ந்து 422 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்167 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.

india

இந்திய ஏ அணியின் இந்த தோல்வி குறித்து பேட்டியளித்த இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில் “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது சிறப்பான விடயமாக இருந்தது. பின்னர் இங்கிலாந்து தொடரில் இந்திய வீரர்கள் எப்படி இங்கிலாந்து மண்ணில் விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டனர். அதே போல ஒரு பயிற்சியாளராக நானும் சில விடயங்களை கற்றுக்கொண்டேன். வெளியில் இருந்து நெருக்கடி இல்லை என்றால் எங்கள் அணியால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement