வாட்சனை ஹோட்டலில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சென்னை வீரர்- வைரல் வீடியோ

Watson
- Advertisement -

இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிக்காக சென்னை அணி தயாராகி வருவது நாளுக்கு நாள் டிரண்டாகி வருகிறது. சென்னை அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவதை சென்னை அணி நிர்வாகம் தினமும் விடியோவாக வெளியிட்டு வருகிறது.

Rayudu

- Advertisement -

இந்த வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை அணி வீரரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் சென்னை அணியில் நேற்று இணைந்தார். வாட்சன் சென்னை அணிக்காக துவக்க ஆட்டக்காரராக ஆடிவருகிறார். கடந்த ஆண்டு இறுதி போட்டியில் வாட்சன் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சீசனில் விளையாட அவர் நேற்று விமானம் மூலம் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த இவரை அணி நிர்வாகம் ஹோட்டல் அறைக்கு அழைத்து வந்தது. அப்போது தன் மகிழியை வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டிருந்த வாட்சன் பின்னால் இருந்து தீடிரென அணியின் மற்றொரு வீரரான பிராவோவும் வந்து அவருக்கு அதிர்ச்சி அளித்தார். இதோ அந்த வீடியோ :

பின்னர் பேசிய பிராவோ நான்தான் உங்கள் சாம்பியன் மற்றும் ஐவரும் சாம்பியன் தான் என்று வைசனுடன் தோளில் கைகோர்த்தபடி சென்னை அணி ரசிகர்களுக்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement