மைதானத்தில் ஆட்டம் போட்ட யுவ்ராஜ் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா வைரலாகும் வீடியோ..!

yuvaraj
- Advertisement -

இந்திய அணியில் ஒன்றாக விளையாடிய போது ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் யுவ்ராஜ் சிங் இருவரும் நல்ல நண்பர்களாய் இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் மைதானத்தில் பல குறும்பான சேட்டைகளை செய்துள்ளனர். ஆனால் சில ஆண்டாளாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கும் நெஹ்ரா , யுவ்ராஜை சந்திக்கும் வாய்ப்பு சற்று குறைந்திருந்தது.

- Advertisement -

தற்போது இவர்கள் இருவரும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் கடந்த திங்கள் கிழமை நடந்த போட்டியில் சந்தித்த போது மைதானத்தில் பஞ்சாபி பாடல் ஒன்று ஒலிபரப்பானது. அந்த பாடலுக்கு இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர்.

இந்த வீடியோ பதிவை ஐ.பி.எல் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் ” இரு நெருங்கிய நண்பர்கள் ஒருவரை ஒருவர் வரவேற்ற தருணம்” என்று பதிவிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது. இதோ அந்த வீடியோ பதிவு!! உங்களுக்காக!!

Advertisement