கேள்வி கேட்க தயாராகும் பி.சி.சி.ஐ.! எதிர்கொள்ளும் இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்.!

ravi-koli-3
- Advertisement -

இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி இப்போது இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியுற்றது இதனால் விரக்தி அடைந்த பி.சி.சி.ஐ நிர்வாகம் இந்திய அணியின் கேப்டன் கோலியிடமும் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடமும் கேள்வி கணைகளை தொடுக்க உள்ளது இந்த வாரம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுடன் இவர்கள் இருவரும் பேச உள்ளனர்.

ravi koli

இந்திய அணி இந்திய மண்ணில் மட்டும் அனைத்து வெளிநாட்டு அணிகளையும் எளிதாக வென்றுள்ளது ஆனால் வெளிநாட்டு தொடர்களின் போது சரிவர விளையாடுவதில்லை குறிப்பாக ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி தனது மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடரில் கூட இந்திய அணியின் வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

2014ல் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் தோல்வி அடைந்த இந்திய அணி இம்முறை அவர்களை வென்று அவர்களை பழி தீர்க்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த தொடர் தோல்விகளை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே இது போன்ற வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி பிரகாசிக்க முடியும் குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே அணி எப்போதும் நம்பி இருக்க கூடாது.

ravi koli 2

இந்நிலையில் இந்திய அணி நிர்வாகம் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடமும் கேள்விகளை எழுப்ப உள்ளது கடைசி மூன்று போட்டிகளுக்கான அணித்தேர்வு நடைபெறும் கூட்டத்தில் இவர்கள் இருவரிடமும் கேள்விகளை எழுப்ப உள்ளது இந்த வர இறுதியில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement