6 பந்துகளுக்கு 6 சிக்ஸர் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கல்…!

yuvisix
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சிக்ஸ் அடிப்பது எல்லாம் ரசிகர்களுக்கு ஒரு வான வேடிக்கை காண்பது போல தான். அதுவே பேட்ஸ்மேன்கள் 6 பந்தில் 6 சிக்ஸ் விளாசினால் அரங்கமே ஆரவாரத்தில் அதிரும். அந்த வகையில் ஒரு கிரிக்கெட் போட்டிகளில் 6 பந்துகளில் தொடந்து 6 சிக்சர்கள் அடித்த டாப் 5 வீரர்களை பற்றிய பட்டியலை தற்போது காணலாம்.

Sir Garfield Sobers

- Advertisement -

சர் கார்பீல்டு ஆபர்ன் சோபர்ஸ்

1954 முதல் 1974 ஆம் ஆண்டு வரை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பேட்ஸ்மேனாக விளையாடியவர். 1968 ஆம் ஆண்டு மால்கம் நாஷ் என்ற அணியுடன் விளையாடிய முதல்ரக கிரிக்கெட் போட்டியில் ஆறு சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

ரவி சாஸ்திரி ;

- Advertisement -

1981 – 92 ஆம் ஆண்டு காலகட்டம் வரை இந்திய அணியில் விளையாடிய ஆல் ரவுண்டர். 1984 ஆம் ஆண்டு பரோடாவிற்கு எதிரான போட்டியில், மும்பை அணியில் விளையாடி வந்த ரவி சாஸ்திரி 6 சிக்சர்களை அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

ravigibs

ஹெர்ச்சல் கிப்ஸ் :

- Advertisement -

தென்னாபிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன், 1996- 2010 ஆம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டியில் ஒரே ஒவரில் 6 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் இவர் தான். 2007 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் நெதர்லாந்து நாட்டிற்கு எதிராக இந்த சாதனையை படைத்துள்ளார்.

யுவ்ராஜ் ராஜ் சிங் :

- Advertisement -

இவரது சாதனையை இந்தியர்கள் அனைவரும் நன்றாக அறிவோம். இந்திய வீரரான இவர், 2007 ஆம் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிரோட் வீசிய 6 பந்துகளையும் சிக்ஸ் விளாசினார். அத்துடன் 12 பந்துகளில் அரை சதமும் அடித்து சாதனை படைத்தார்.

yuvi

அலெக்ஸ் ஹேல்ஸ் :

இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேனான இவர், ஒரு டென்னிஸ் வீரரும் கூட. 2017 ஆம் ஆண்டு நடந்த நேட் வெஸ்ட் டி20 தொடரில் 11 வது ஒவேரில் 4 வது பந்தின் போது தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார். பின்னர் அடுத்த ஓவரில் 2 வது பந்தை எதிர்கொண்ட போது மீண்டும் 3 சிக்சர்களை அடித்து 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்துள்ளார்.

Advertisement