7 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்தியா செய்த மோசமான சாதனை..! என்ன தெரியுமா..?

kholi
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக இங்கிலாந்து மண்ணில் டி20 தொடரை கைபற்றி சாதனை படைத்தது. தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்துள்ளது. இதில் இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி மோசமான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது.
indiateam
இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின்னர் கடந்த சனிக்கிழமை (ஜூலை 14 ) நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததோடு இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கமுடியாததால் ஒரு மோசமான சம்பவத்தையும் நிகழ்த்தியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையம் இழந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் எந்த ஒரு வீரரும் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.

கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அணி ஒரு போட்டியில் ஒரு சிக்ஸர் அடைக்காமல் இருந்துள்ளது என்பது இது இரண்டாவது முறை . கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் தான் இந்திய அணி ஒரு சிக்ஸரை கூட அடிக்காமல் இருந்தது. இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 85 ரன்களை எடுத்திருந்தார்.

- Advertisement -
Advertisement