ஐபிஎல் முறைகேட்டில் ஈடுபட்ட CSK உரிமையாளருக்கு 121 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத்துறை..!

srinivasan
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது தென்னாபிரிக்காவில் இருந்து சுமார் ரூ.243 கோடியை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். மற்றொரு நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கு இவ்வளவு பெரிய தொகையை அனுப்புவதற்கு அந்நிய செலாவணி சட்டத்தின் படி சர்வ் வங்கியிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
srini
ஆனால், அதுபோன்ற எவ்வித அனுமதியும் இல்லாமல்இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையை இந்திய அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு வந்தனர். தற்போது இந்த விசாரணையின் முடிவில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில்

* பிசிசிஐ நிர்வாகத்துக்கு 82.66 கோடியும்
* கிரிக்கெட் நிர்வாகி எம்.வி.பாண்டேவுக்கு ரூ.9.72 கோடியும்
* லலித் மோடிக்கு ரூ.10.65 கோடியும்
* என்.ஸ்ரீனிவாசனுக்கு ரூ.11.53 கோடியும்
lalit

- Advertisement -

அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பரிவர்த்தனைக்கு உதவிய ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம். விதிக்கப்பட்டுள்ளது .ஐ.பி.எல்லை உருவாக்கி வளர்த்ததில் லலித் மோடியின் பங்கு முக்கியமானது. 2010ம் ஆண்டில் ஒளிபரப்பான ஐபிஎல் போட்டியின் போது ஐபிஎல் நிர்வாகத்தின் தலைவர்க இருந்த இதன் கமிஷனராக லலித் மோடி மீது கிரிக்கெட் போட்டிகளை ‘டிவி’ சேனல்களில் ஒளிபரப்பும் உரிமைகளை மாற்றி கொடுத்த வகையில் பல கோடி ரூபாய் மோசடி செய்தார் என்று புகா ரளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement