இங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்..! இந்திய பந்துவீச்சு, பேட்டிங் சொதப்பல்..! – விவரம் உள்ளே

ajinkiya
- Advertisement -

இந்திய ஏ அணி ,இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த 4 ஆம் தேதி துவங்கிய மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அதைத்தொடர்ந்த கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைபற்றியது. .
CRICKET-SRI-IND
இதை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது. கடந்த 16 ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 423 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து விளையாடிய இந்திய ஏ அணி 197 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சாப்ரில் அதிகபட்சமாக பிரிதிவி ஷா 62 ரன்களும், ரிஷப் பண்ட் 58 ரன்களும் குவித்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 194 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் 422 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை பறிகொடுத்துள்ளது.

நேற்று (ஜூலை 18) மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் பிரிதிவ் ஷா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் முரளி விஜய் 34 பந்துகளுக்கு 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் 7 விக்கெட் கையில் உள்ள நிலையில் இந்திய அணி 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்று 4 ஆம் நாள் போட்டியில் களமிறங்க உள்ளது.

- Advertisement -
Advertisement